

விடுதலை வேந்தர் விருப்பாட்சி கோபால் நாயக்கர்
செ.திவான்
ரெகான் - ரய்யா பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9080330200
விஜயநகரப் பேரரசு தமிழ்நாட்டை ஆண்டு, பண்பாட்டுரீதியில் தாக்கம் செலுத்திய அரச வம்சம். இந்த அரச வம்சத்தைச் சேர்ந்த விருப்பாட்சி கோபால் என்கிற அரசரைப் பற்றிய புத்தகம் இது.
மாணவர்களுக்கு...
க.சண்முக வேலாயுதம்
வாழ்க வளமுடன் பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9444022930
மாணவர்கள் தேர்வை எதிர்கொள்வது எப்படி, அவர்களின் உடலுக்குத் தேவையான பயிற்சிகள், வளர்த்துக்கொள்ள வேண்டிய ஆளுமைத் திறன் போன்ற பல அம்சங்கள் இந்தப் புத்தகத்தில் விளக்கப்பட்டுள்ளன.
தனிமையின் சாயல்
தொகுப்பாசிரியர்: வலம்புரி லேனா
எழில் மீனா பதிப்பகம்
விலை: ரூ.130
தொடர்புக்கு: 9894113839
பண்பாடு, வாழ்க்கை, இயற்கை உள்ளிட்ட பல தலைப்புகளில் சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட ஒளிப்படங்களுக்குத் தகுந்தாற்போல் கவிதை எழுதச் சொல்லி வைக்கப்பட்ட போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்ட கவிதைகளின் தொகுப்பு.
மனிதர்கள் நடைபாதையில் இருக்கிறார்கள்
ஹரணி
கே.ஜி.பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9442398953
பல்வேறு இதழ்களில் வெளிவந்த 23 சிறுகதைகளின் தொகுப்பு இது. தனது அனுபவத்தை எளிய மொழியில் சுவாரசியமாகச் சொல்லும் கலை ஆசிரியருக்குக் கைவரப்பெற்றுள்ளது.
வி.என்.ராகவன்
வி.என்.ஆர். குடும்ப உறவுகளும் தோழமையும்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)
மத்திய சென்னை மாவட்ட அலுவலகம்
நன்கொடை: ரூ.100
தொடர்புக்கு: 94442 32053
தபால் தந்தித் துறை தொழிற்சங்க ஊழியராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி, தொழிற்சங்கத் தலைவராக மாறிய தோழர் வி.என்.ஆர். குறித்து அவருடன் பணிபுரிந்தவர்கள், நண்பர்கள் எழுதிய கட்டுரைகளின்
தொகுப்பு.