

ஐவகை நிலமும் தமிழர் வாழ்வும்
ப.பாலசுப்பிரமணியம்
அழகு பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 044 26502086
தமிழ்ப் பண்பாட்டின் ஐவகை நிலங்களான குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை ஆகியவற்றின் வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டும் கட்டுரைகள் கொண்ட நூல்.
ராவண நிழல்
இரா.சைலஜா சக்தி
காவ்யா
விலை: ரூ.540
தொடர்புக்கு: 9840480232
தோல்பாவைக் கூத்தும் அந்தக் கலைஞர்களின் வாழ்க்கையும் சார்ந்த நாவல் இது. நாட்டார் கலைகளைப் பதிவுசெய்த பேராசிரியர் அ.கா.பெருமாள் இந்த நாவலுக்குள் ஓர் அங்கமாக வந்து செல்கிறார்.
சுட்டுவிடும் தூரம்
அ.கெளரி சங்கர்
குவிகம் பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 8939604745
பல பொருளில் அமைந்த பத்து சிறுகதைகளின் தொகுப்பு இது. நூலாசிரியர் கதை சொல்லும் போக்கில் கைக்கொண்டுள்ள மொழி வாசகர்களுக்குச் சுவாரசியம் அளிக்கக்கூடியதாக உள்ளது.
கண்ணாடிப் பேழைக்குள்
சுழலும் கவிதைகள்
இரா.தேன்மொழி
இனிய நந்தவனம் பதிப்பகம்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 9443284823
எளிமையான சொற்களில் பெண்ணின் அக உலகத்தை இந்தக் கவிதைகள் காட்சிப்படுத்துகின்றன. பெண்களின் பிரச்சினைகளையும் இக்கவிதைகள் வழி ஆசிரியர் பதிவுசெய்துள்ளார்.
மாநில ஆளுநர் பொறுப்பும் பணியும்
எம்.ஆர்.ரகுநாதன்
ஸ்ரீசெண்பகா பதிப்பகம்
விலை: ரூ.280
தொடர்புக்கு: 044 24331510
மாநில ஆளுநரின் பொறுப்பு என்ன, அவரது அதிகாரங்கள் என்ன என்பதைச் சமகால உதாரணங்களுடன் இந்தப் புத்தகம் விளக்குகிறது. ஆளுநரின் அதிகாரம் குறித்து நிபுணர்களின் கருத்துகளும் தொகுக்கப்பட்டுள்ளன.