

சுமை கூலி
(சின்னஞ்சிறு கதைகள்)
நெல்லை தேவன்
காட்சில்லா கலைக்கூடம்
விலை: ரூ.110
தொடர்புக்கு: 9489246602
தனிப் பிரச்சினைகள், சமூகப் பிரச்சினைகள் எனப் பல பொருள்களில் அமைந்த குறுங்கதைகளின் தொகுப்பு. சிறு விவரிப்பு, இரண்டு மூன்று உரையாடல்களுடன் வாசக சுவாரசியத்துக்காக இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன.
பத்மாவதி சரித்திரம்
அ.மாதவையா
காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.350
தொடர்புக்கு: 044 23326882
நூற்றாண்டைக் கடந்த தமிழின் பழமையான நாவல் இது. அந்தக் காலகட்டத்தில் பெண்களுக்கு எதிராக நிலவிய அடிமைத்தனத்தை எதிர்த்து இந்த நாவல் எழுதப்பட்டிருக்கிறது. மூன்று பகுதிகளாக இந்நாவல் உள்ளது.
சாக்லட் பெண்ணும் பண்ணை வீடும்
குரு அரவிந்தன்
இனிய நந்தவனம் பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 9443284823
இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து கனடாவில் வாழும் குரு அரவிந்தனின் கதைகள் இவை. அந்த மண்ணின் அனுபவங்களைச் சுவாரசியமான கதைகளாக மாற்றியிருக்கிறார். அறியாப் பிரதேசத்தின் கதையை இதில் வாசித்துணர முடியும்.
திருமுருகாற்றுப்படை மூலமும் பரிமேலழகர் உரையும்
ஆய்வும் மீள்பதிப்பும்: இரா.அறவேந்தன், நித்தியா அறவேந்தன்
மலர் புக்ஸ் வெளியீடு
விலை: ரூ.230
தொடர்புக்கு: 9382853646
பரிமேலழகர் 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். இவர் திருமுருகாற்றுப்படைக்கு உரை எழுதியுள்ளார். இந்த உரை மூன்று பதிப்புகளாக வந்துள்ளது. இவற்றை ஆய்வு நோக்கில் இந்த நூல் அணுகியுள்ளது.
உலகை மாற்றிய பெண் கணித மேதைகள்
சோ.மோகனா
பாரதி புத்தகாலயம்
விலை: ரூ.180
தொடர்புக்கு: 8778073949
பொது ஆண்டுக்கு முன்பு 546இல் வாழ்ந்த இத்தாலியைச் சேர்ந்த பெண் கணித மேதை தியானோ தொடங்கி உலகின் பிரபலமான நவீனப் பெண் கணித மேதைகள் வரை இந்தப் புத்தகம் விரிவாகப் பதிவுசெய்துள்ளது.