

இருமை கடந்த ஒருமைக் கதைகள் நம் வாழ்க்கை இன்பம், துன்பம்; நல்லது, கெட்டது என இரண்டு நிலைகளில் ஊசலாடிக்கொண்டிருக்கிறது. நண்பன், எதிரி; நல்லது, கெட்டது இப்படிப் பல இரு நிலைகள். இம்மாதிரியான நிலைகள் என்றால் போட்டி உருவாகும்; பிரச்சினைகள் தலைதூக்கும்.
இதை இருமை என்கிறோம். ஜென் தத்துவம் இருமையைக் கடக்க வலியுறுத்துகிறது. ஒன்றுடன் ஒன்றை ஒப்பிடுவது முறையானது அல்ல. ஒவ்வொன்றும் அதனதன் தனித்துவத்தில் இருக்கும். அதனால் ஒன்றை அதன் இயல்புடன் ஏற்றுக்கொள்ள வேண்டும். அதை ஒருமை என்கிறோம்.
இந்தத் தொகுப்பிலுள்ள கதைகள் இருமையைக் கடப்பதை எளிமையாக விளக்குகின்றன. நாள்களில் எது சிறந்த நாள் எனக் கேட்கும் ஒரு கதை இதில் உள்ளது. அது எல்லா நாள்களையும் நல்ல நாளே எனச் சொல்லி முடிகிறது. ஜென் தத்துவத்தை இப்படிப் பல கதைகள் வழி எளிமையாக விளக்க இந்தக் கதைகள் உதவும். - விபின்
ஜென்: ஒரு தீர்வு இல்லாத புதிர் (முரண்பாடான கதைகள்)
ஜியோமே எம்.குபோஸ் (தமிழில்: சுப.மீனாட்சி சுந்தரம்)
கண்ணதாசன் பதிப்பகம், விலை: ரூ.220
தொடர்புக்கு: 044 2433 2682
நம் வெளியீடு
`ஞாலம் பெரியது. என்னுடைய ஞானம் சிறியது’ என்னும் தன்னடக்கத்தோடு மகான்களைக் குறித்து மேற்கொண்ட தேடல் பயணத்தின் பயனாக மலர்ந்திருக்கிறது இந்நூல். பக்கத்துக்குப் பக்கம் ஆன்மிகச் சாரல், படிக்கும் உங்களையும் குளிர்விக்கும். 30-க்கும் மேற்பட்ட கட்டுரைகளில் ஆன்மிகம் குறித்தும் மகான்களைக் குறித்தும் உங்களுக்கு எழும் கேள்விகளுக்குப் பதில் கிடைக்கும்.
ஞானத்தின் சிறிய புத்தகம்
தஞ்சாவூர்க் கவிராயர்
இந்து தமிழ் திசை
விலை: ரூ.140
தொடர்புக்கு: 7401296562