

வண்ண முகங்கள்
விட்டல் ராவ்
ஜெய்ரிகி பதிப்பகம்
விலை: ரூ.220
தொடர்புக்கு: 8643842772
தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளர் விட்டல் ராவ். கன்னட நாடக ஆளுமையான குப்பி வீரண்ணாவின் நாடகக் குழுவை மையமாகக் கொண்டு இந்த நாவல் புனையப்பட்டுள்ளது.
ஆபத்தில் கூட்டாட்சி
வே.ஆனைமுத்து
(தமிழில்: வெற்றிச்செல்வன்)
திராவிடன் ஸ்டாக் வெளியீடு
விலை: ரூ.60
தொடர்புக்கு: 9092787854
சட்டத் திருத்தங்கள் மூலம் மாநிலப் பட்டியலில் இருந்த கல்வி மத்தியப் பட்டியலுக்கு மாற்றப்பட்டது போன்ற பல விஷயங்களைக் குறிப்பிட்டு, கூட்டாட்சி முறையின் நிலை குறித்துப் பேசப்பட்டுள்ளது.
ஒடுக்கப்பட்டோர் வாழ்வும் தன்வரலாறுகளும்
முனைவர் இரா.வெங்கடேசன்
யாப்பு வெளியீடு
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9080514506
பல்வேறு பண்பாட்டுப் பின்புலங்கள் கொண்ட தன்வரலாறுகளில் உள்ள அழகியல், சடங்குகள், நம்பிக்கைகள் ஆகியவை குறித்து தலித் தன்வரலாறுகள் பின்னணியில் ஆராய்ந்துள்ள நூல் இது.
யானைகளின் வருகை
கா.சு.வேலாயுதன்
கதை வட்டம் வெளியீடு
விலை: ரூ.300
தொடர்புக்கு: 9994498033
மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள் குறித்து இந்நூல் விரிவாகப் பேசுகிறது. அங்கு விலங்குகளை அச்சுறுத்தும் ஆக்கிரமிப்புகள் குறித்து ஆதாரங்களுடன் துணிச்சலாக எழுதப்பட்டுள்ளது.
இலங்கைப் போர்
அமீஷ் (தமிழில்: மாலதி கிருஷ்ணா)
வெஸ்ட்லேண்ட் பதிப்பகத்தின் இகா பதிப்பு
விலை: ரூ.499
ராமாயணக் கதையில் வரும் ராவணனுக்கும் ராமனுக்கும் இடையிலான போர் குறித்த விறுவிறுப்பான புதினம். ராமாயணம் சொல்லும் நிகழிடங்கள் இன்றைய பொருத்தப்பாட்டில் இந்நூலில் விவரிக்கப்பட்டுள்ளன.