

என் வாழ்வில் இனி நீ இல்லை சீசர்
சீராளன் ஜெயந்தன்
சுவடு பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 95510 65500
பலதரப்பட்ட மனக் காட்சிகளின் விவரிப்பாக இந்தக் கவிதைகள் இருக்கின்றன. காதல், காமம், பால்யகால நினைவுகள் எனப் பல பொருள்களில் எளிமையாக இந்நூலின் ஆசிரியர் கவிதைகளைக் கோத்துள்ளார்.
நூற்றி முப்பத்தியோரு பங்கு
ரமேஷ் ரக்சன்
யாவரும் பதிப்பகம்
விலை: ரூ.135
தொடர்புக்கு: 9042461472
கரோனா காலத்தில் எழுதப்பட்ட கதைகளின் தொகுப்பு. ஆர்ப்பாட்டமில்லாத எளிய மொழியில் அமைந்த கதைகள். இதன் மனிதர்களைப் போல் இயல்பாகப் புனையப்பட்டுள்ளன இக்கதைகள்.
கடுந்துயருற்ற காதலர்கள் சதுர சாளரத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு முற்றத்திலிருந்து வெளியேறிய போதிலும்
தக் ஷிலா ஸ்வர்ணமாலி
(தமிழில்: ரிஷான் ஷெரீப்)
கஸல் பதிப்பகம்
விலை: ரூ.120
தொடர்புக்கு: 0094 770807787
இலங்கைப் பின்னணியில் எழுதப்பட்ட பரிசோதனை முயற்சி நாவல் என இதைச் சொல்லலாம். போர்ச் சூழல், தத்துவங்கள், ஒரு காதல் என எல்லாவற்றையும் நாவல் விசாரித்துச் செல்கிறது.
இந்திய இலக்கியச் சிற்பி வரிசை
சுந்தர சண்முகனார்
சு.வேல்முருகன்
சாகித்திய அகாடமி வெளியீடு
விலை: ரூ. 50
தொடர்புக்கு: 04424311741
புதுச்சேரி தமிழ் அறிஞர் சுந்தர சண்முகனார். இவரது வாழ்க்கையையும் தமிழ்த் தொண்டையும் இந்நூலில் ஆசிரியர் விவரித்துள்ளார். லத்தீன் மொழியைத் தமிழுடன் ஒப்பிட்டு அவர் மேற்கொண்ட ஆராய்ச்சி உள்பட அவரது செயல்பாடுகள் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன.
இரவில் சப்தமிடும் மூங்கில்
கீழை நிலாபாரதி
தரணி பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 7904517061
எளிய தமிழ்ச் சொற்களால் செய்த காதல் கவிதைகள் இவை. இயற்கையிடமிருந்து விலகி, இந்த நூற்றாண்டு வாழ்க்கை முறையில் இருந்து வாசிக்க இயற்கையால் ஆன சொல் வனமாக இந்தக் கவிதைகள் குளிர்ச்சி தருகின்றன.