Published : 11 Nov 2017 10:07 AM
Last Updated : 11 Nov 2017 10:07 AM

பிறமொழி நூலறிமுகம்: புகைப்படமாக ஒரு சமூக வரலாறு

‘ஒ

ரு புகைப்படம் ஆயிரம் வார்த்தைகளை வெளியிடுகிறது’ என்ற சொலவடை உண்டு. ஒரு பகுதி மக்களின் சமூக வரலாற்றையே புகைப்படங்களின் மூலம் ஆவணப்படுத்தும் முயற்சி மிகவும் அபூர்வம்தான்.

இந்நூலாசிரியர்களான ஜோய். எல்.கே. பச்சுவா, வில்லெம் வான் ஷெண்டெல் ஆகியோர் இதுவரை வரலாற்றாசிரியர்கள் பொதுவாகப் புறக்கணித்துவந்த ஆதாரவளமான புகைப்படத்தைத் திறமையாகப் பயன்படுத்தி மிசோரம் மாநில மக்களின் சமூக வரலாற்றைப் பதிவுசெய்துள்ளனர்.

1860-லிருந்து தொடங்கி 2010 வரையிலான காலத்தை, சுமார் 17,000-க்கும் மேற்பட்ட புகைப்படங்களின் மூலம் மிசோ மக்களின் வரலாற்றை அவர்கள் ஆவணப்படுத்தியுள்ளனர். இவற்றில் பெரும்பகுதி மிசோரம் பகுதியில் உள்ள மக்களின் தனிப்பட்ட குடும்ப ஆவணங்கள் எனும்போது, இந்த பூர்வகுடி மக்கள் எவ்வாறு நவீனத்தை ஏற்றுக்கொண்டு, அந்த மாற்றத்தை பதிவும் செய்துவந்துள்ளனர் என்பதை இந்நூல் உறுதிப்படுத்துகிறது.

இந்த 150 ஆண்டு காலப்பகுதியில் மிசோ மக்களின் கல்வி, உணவு, உடை, கலை, கலாச்சாரம் போன்றவை எவ்வாறு மாற்றம் பெற்றன என்பதைப் புகைப்பட ஆதாரங்களோடு இந்த நூல் மிகத் தெளிவாகப் பதிவுசெய்கிறது.

- வீ.பா.கணேசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x