

பொங்குமாங்கடல் (இலக்கிய விமர்சனக் கட்டுரைகள்)
உஷாதீபன்
நன்னூல் பதிப்பகம்
விலை: ரூ.250
தொடர்புக்கு: 9943624956
தி.ஜானகிராமன், கு.அழகிரிசாமி, கி.ராஜநாராயணன், சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் எனத் தமிழின் முக்கியமான படைப்பாளிகள் பலரது ஆக்கங்களைப் பற்றிய கட்டுரைகள் கொண்ட நூல். இளம் வாசகர்களுக்கு நல் அறிமுகமாக இருக்கும்.
மின்சாரப்பூ (சிறுகதைகள்)
மேலாண்மை பொன்னுச்சாமி
மெய் நிழல் வெளியீடு
விலை: ரூ.180
தொடர்புக்கு: 9092858529
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமிக்குச் சாகித்திய அகாடமி விருதுபெற்றுத் தந்த சிறுகதைத் தொகுப்பின் மறு பிரசுரம். உதிரி மனிதர்களின் பலரது வாழ்க்கையில் ஒருவராக நின்று அந்த வாழ்க்கையைச் சொல்லும் கதைகள் இவை.
நிழலைத் துரத்துகிறவன் (நாவல்)
க.முத்துக்கிருஷ்ணன்
சந்தியா பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 044 24896979
சரவணன், ரமா ஆகிய இரு கதாபாத்திரங்களின் வாழ்க்கையைச் சாரமாகக் கொண்டு, உலக வாழ்க்கையை விசாரிக்கிறது இந்த நாவல். உறவுகளுக்குள் இருக்கும் முரண்களையும் பினைப்பையும் அதனால் அடையும் வேதனையையும் சித்திரிக்கிறது.
நாள் ஒன்று, கதை ஒன்று (குறுங்கதைகள்)
செவாலியே பேராசிரியர் க.சச்சிதானந்தம்
பாலா பதிப்பகம்
விலை: ரூ.200
தொடர்புக்கு: 6374489340
பிரெஞ்சு ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் சச்சிதானந்தம். பிரான்சு, ஆப்ரிக்கா, சீனா உள்ளிட்ட பல நாடுகளின் பிரபல கதைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. எளிமையும் சுவாரசியமும் கொண்ட கதைகள் இவை.
வடக்கு நோக்கிய பருவகாலப் புலப்பெயர்வு
தையிப் ஸாலிஹ்
சீர்மை வெளியீடு
விலை: ரூ.220
தொடர்புக்கு: 8072123326
காலனியத்துவமும் நவீனத்துவமும் சூடான் பண்பாட்டில் நிகழ்த்திய மாற்றத்தைச் சொல்லும் நாவல் இது. அரபு புனைவிலக்கிய உலகில் சலனத்தை ஏற்படுத்திய பிரபல அரபு எழுத்தாளர் தையிப் ஸாலிஹின் நாவல் இது.