Published : 14 Oct 2017 10:50 AM
Last Updated : 14 Oct 2017 10:50 AM

நூல் நோக்கு: மனிதத்தின் கவிதை முகம்

மனிதத்தின் கவிதை

முகம்

‘மானுடம் பாடும் வானம்பாடி’யாக தமிழ்க் கவிதைத் தளத்தில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக, இடையறாத கவிதை இயக்கமாக எழுதிவருபவர் ஈரோடு தமிழன்பன். மரபிலும் வேர்கொண்டு, புதுக்கவிதையில் கிளை பரப்பியவர்; ஹைக்கூமீதும் பெருங்காதல் கொண்டவர்; நவகவிதைகளிலும் முத்திரையைப் பதித்திருப்பவர்.

‘கவிதை என் மூன்றாவது கண். இந்தக் கண்ணுக்கு விழிப்பு, உறக்கம் என்கிற இமைகள் இல்லை’ என்று சொல்லும் கவிஞர், சமீபத்தில் எழுதிய 68 கவிதைகள் இந்நூலில் உள்ளன. தேர்ந்த வார்த்தைகளைக் கொண்டு கட்டப்பட்ட கவிதைகள்; வாசித்ததும் சட்டென்று நம் மனதுக்குள் வினைபுரிகின்றன. ‘ஒரு பேச்சாளனின் கதை’, ‘பொங்கல் மலர் சலுகை விலையில்’, ‘விற்பனை செய்யப்பட்டவன்’, ‘ஆடை இழந்த ஆசைகள்’ என்று தலைப்பில் மட்டுமல்ல, செறிவான மொழியாலும் நம்மை ஈர்க்கின்றன இந்தத் தொகுப்பிலுள்ள கவிதைகள். ‘பகலின் கையில் எனக்கான நம்பிக்கைகள்/ கருகிச் சாம்பலாவதற்கு எப்படிச் சம்மதிப்பேன்?’ போன்ற வரிகள் ஈரோடு தமிழன்பனின் முத்திரையைத் தாங்கியிருக்கும் வரிகள்.

-மு.முருகேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x