

தமிழ்நாட்டின் கொடைக்கானலில் அமைந்திருந்த இந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனத்துக்குச் சொந்த மான பாதரச வெப்பமானி (தெர்மாமீட்டர்) தயாரிக் கும் தொழிற்சாலையில், 2001இல் கண்டறியப்பட்ட விதிமுறைகளுக்குப் புறம்பான குப்பைக்கிடங்கு, தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
நச்சுக் கழிவுகளை அகற்றுவதற்கான அனைத்து ஏற்றுக்கொள்ளப்பட்ட வழிகாட்டுதல் களையும் அந்நிறுவனம் மீறியதால், அதன் தொழிலாளர்களின் உடல்நலனும் அப்பகுதியின் சூழலியல் தொகுதியும் மிகக் கடுமையான பாதிப்புக்கு உள்ளானது கண்டறியப்பட்டது. முன்னாள் புலனாய்வு இதழாளரும் கிரீன்பீஸ் செயல்பாட்டாளருமான அமீர் ஷாகுல், இப் பிரச்சினை தொடர்பான வழக்குகளைத் தொடர்ந்து கவனித்துவந்தார்; அதன் விளைவாக விரிவாக இந்நூலை எழுதியுள்ளார். - அபி
Heavy Metal:
How a Global Corporation Poisoned Kodaikanal
Ameer Shahul
வெளியீடு: Pan Macmillan India
விலை: ரூ.799