

தற்போது இந்தியாவை ஆண்டு வரும் நரேந்திர மோடி அரசு, பாசிசத்தின் கூறுகளை உள்ளடக்கியிருப்பதாக நிறுவ முயலும் நூல். முசோலினி, ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகளுக்கும் பாஜகவின் சித்தாந்த முன்னோர்களான சாவர்கர். கோல்வால்கர் ஆகியோருக்கும் இருந்த சிந்தனை ஒற்றுமைகளை இந்நூல் விவரிக்கிறது.
முசோலினி முதல் மோடி வரை
அருணன்
வசந்தம் வெளியீட்டகம், மதுரை
விலை: ரூ.120
தொடர்புக்கு: 99407 55965
தமிழர்களின் தொன்மையான வீர விளையாட்டான களரியின் தோற்றம், அது தமிழ்நாட்டிலும் உலகின் பிற பகுதிகளுக்கும் பரவிய விதம். களரியின் இன்றைய நிலை ஆகியவை குறித்துக் கள ஆய்வுகள் செய்து இந்நூலில் எழுதப்பட்டுள்ளது.
களரி அடிமுறை - 1
முத்தாலங்குறிச்சி காமராசு
உலக களரி அடிமுறைக் கூட்டமைப்பு,
விலை: ரூ.190
தொடர்புக்கு: 70101 80719
பெளத்த மதத் தத்துவங்களை வினா-விடை வடிவில் அளிக்கும் ‘மிலிந்த பண்ஹ’வைத் தமிழுக்கு அறிமுகம் செய்கிறது இந்நூல். உரிய இடங்களில் தொல்காப்பியர் திருவள்ளுவர், அம்பேத்கர், மாக்ஸ் முல்லர் போன்றோரின் கருத்துகள் எடுத்தாளப்பட்டுள்ளன.
மிலிந்த பண்ஹ
முனைவர் க.ஜெயபாலன்
பாபாசாகேப் அம்பேத்கர் கலை இலக்கியச் சங்கம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 98847 44460
ஒகேனக்கல் அருவி, அண்ணா நினைவிடம் (சென்னை), கல்லணை (திருச்சி) போன்ற தலங்கள், திருக்குவளை, புதுச்சேரி உள்ளிட்ட ஊர்கள் எனத் தான் பயணித்த இடங்கள் குறித்த நூலாசிரியரின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
நினைவோடும் வீதி
பாப்பாக்குடி இரா.செல்வமணி
கலை பதிப்பகம், திருநெல்வேலி
விலை: ரூ.125
தொடர்புக்கு: 94421 12763, 87541 03628
மருத்துவராகவும் எழுத்தாளராகவும் சமூகச் செல்வாக்குடன் இருக்கும் பெண், கணவர் வீட்டில் கொடுமைகளையும் களங்கங்களையும் எதிர் கொள்கிறார். அவருக்கு ஏற்படும் சில அமானுஷ்ய அனுபவங்கள் அவரை அந்தக் கொடுமையிலிருந்து விடுவித்தனவா என்பதைச் சொல்லும் நாவல் இது.
நல்லதோர் வீணை செய்தே
லட்சுமி பிரபா
கங்கை புத்தக நிலையம், சென்னை
விலை: ரூ.280
தொடர்புக்கு: 2434 2810, 2431 0769