Published : 14 Oct 2017 10:37 AM
Last Updated : 14 Oct 2017 10:37 AM

பிறமொழி நூலறிமுகம்: கலை-இலக்கியத்திலும் தளபதியாய்…

ஹொஸே மார்த்தி, ஸ்பானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துக் கருத்துக் களத்திலும் போர்க்களத்திலும் போராடி, லத்தீன் அமெரிக்க விடுதலை இயக்கத்துக்கு வித்திட்டவர்களில் ஒருவர். கியூபாவை ஸ்பானிய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கத் தன் 42 ஆண்டு கால வாழ்வின் பெரும் பகுதியை செலவிட்டவர். ஃபிடல் காஸ்ட்ரோவின் ஆதர்ச நாயகன். அவரது மறுபக்கத்தைக் காட்டுகிறது இந்நூல். கியூப விடுதலைக்காக ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் வலம்வந்த காலத்தில் தான் எதிர்கொண்ட கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்களின் படைப்புகளைப் பற்றி ஒரு விமர்சகராக ஹொஸே மார்த்தி பல்வேறு இதழ்களிலும் நாளிதழ்களிலும் எழுதிய கட்டுரைகளில் சில இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஸ்பானிய, அமெரிக்க கலைஞர்களின் படைப்புகளை அலசிய அதே நேரத்தில் லத்தீன் அமெரிக்க படைப்பாளிகளை வெளியுலகத்துக்கு அறிமுகப்படுத்தும் முயற்சிகளையும் இந்நூலில் காண முடிகிறது. போராட்டக் களத்தினூடே தான் சேகரித்த விலைமதிப்பற்ற ஓவியங்களை விற்று கியூப விடுதலைப் போராட்டத்துக்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென அவர் எழுதிவைத்த உயில், விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு ஒரு முன்னுதாரணம்.

-வீ.பா.கணேசன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x