Published : 28 Oct 2017 11:32 AM
Last Updated : 28 Oct 2017 11:32 AM

தொடுகறி: கலைஞர் பொற்கிழி விருதுகள்

 

தெ

ன்னிந்தியப் புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் (பபாசி) 2017-ம் ஆண்டுக்கான கலைஞர் பொற்கிழி விருது வழங்கும் விழாவை சென்னையில் இன்று நடத்துகிறது. இவ்விழாவில் புனைகதை பிரிவில் எழுத்தாளர் பிரபஞ்சன், நவீன இலக்கியம் பிரிவில் கவிஞர் கலாப்ரியா, கட்டுரை பிரிவில் சுப.வீரபாண்டியன், இலக்கியம் பிரிவில் தீபம் எஸ்.திருமலை, கவிதை பிரிவில் ஆலந்தூர் கோ.மோகனரங்கன், இதழாளர் பிரிவில் கே.ஜீவபாரதி, சிறுவர் இலக்கியம் பிரிவில் பி.எல்.ராஜேந்திரன் ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் ரூ.1 லட்சம் விருதுத் தொகையாக வழங்கப் படுகிறது. இவ்விருதுகள் கலைஞர் தனது சொந்தப் பணத்திலிருந்து கொடுத்த ஒரு கோடி ரூபாயைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது.

 

28-10-CH-PUVI-EDIT 1- THODUKARI 2 2

அமெரிக்காவில் ஆயிரம் தமிழ்க் கவிதைகள்...

ஈரோடு தமிழன்பன் எழுதிய 27 கவிதை நூல்கள், 800 பக்கஅளவில் ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. கா.செல்லப்பன், கே.எஸ்.சுப்ரமணியன்,எஸ்.ஏ.சங்கரநாராயணன், மறைமலை இலக்குவனார், இராமச்சந்திரன், பேரா.அய்யாச்சாமி, ஜோசப் ஜூலியஸ் ஆகியோர் மொழிபெயர்த்த கவிதைகளை ‘தி எஸென்சியல் ஈரோடு தமிழன்பன்’ என்ற தலைப்பில் புதுச்சேரி தி.அமிர்தகணேசன் தொகுத்திருக்கிறார்.

அமெரிக்காவில் சிகாகோ பல்கலைக்கழகத்தில் வெளியிடப்பட்ட இந்நூலுக்கு நியூயார்க் தமிழ்ச் சங்கத்தில் அறிமுக விழாவும் நடந்துள்ளது. இன்று டெக்சாஸ்- டாலஸ் நகர் தமிழ்ச் சங்கம்சார்பில் ‘நூறு குரல்களும், ஆயிரம் கவிதைகளும்’ எனும் தொடர் கவிதை வாசிப்பு நிகழ்வும் நடைபெறுகிறது.

இந்நிகழ்வில், கவிஞர் ஈரோடு தமிழன்பனின் ஆயிரம் கவிதைகளை குழந்தைகள், பெண்கள், ஆசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் என அனைவரும் கலந்துகொண்டு வாசிக்க இருக்கின்றனர். தமிழ்க் கவிஞர் ஒருவருக்கு அமெரிக்க மண்ணில் இப்படியொரு விழா நடப்பது இதுவே முதல்முறை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x