நெஞ்சு வலியால் அவதிப்பட்ட தொழிலாளிக்கு பெருந்தமனி வளைவு மாற்று அறுவை சிகிச்சை: மறுவாழ்வு அளித்த ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பெருந்தமனி வளைவு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட தொழிலாளியுடன் இதய அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் மாரியப்பன் தலைமையிலான மருத்துவக் குழுவினர்.

ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பெருந்தமனி வளைவு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட தொழிலாளியுடன் இதய அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் மாரியப்பன் தலைமையிலான மருத்துவக் குழுவினர்.

Updated on
2 min read

சென்னை: கடும் நெஞ்சு வலி​யால் அவதிப்​பட்ட ஏழை தொழிலாளிக்கு பெருந்​தமனி வளைவு மாற்று அறுவை சிகிச்சை செய்து ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை மருத்​து​வர்​கள் மறு​வாழ்வு அளித்​துள்​ளனர்.

இது தொடர்​பாக சென்னை ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை டீன் சாந்​தா​ராமன், மருத்​துவ கண்​காணிப்​பாளர் பாஸ்​கரன், இதய அறுவை சிகிச்​சைத் துறை இயக்​குநர் மாரியப்​பன் ஆகியோர் கூறிய​தாவது: சிதம்​பரத்தை சேர்ந்த 54 வயதான முடி திருத்​தும் தொழிலாளிக்கு கடுமை​யான நெஞ்சு வலி மற்​றும் கட்​டுப்​பாடற்ற உயர் ரத்த அழுத்​தம் இருந்​தது.

எனவே கடந்த நவம்​பர் 23-ம் தேதி ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை இதய அறுவை சிகிச்​சைத் துறை​யில் அவர் அனு​ம​திக்​கப்​பட்​டார். பரிசோதனை செய்​த​தில் அவருடைய இதயத்​தின் முக்​கிய ரத்த குழா​யான பெருந்​தமனி, அதன் மேல் பகுதி முதல் வளைவு பகுதி வழி​யாக கீழ் பகுதி வரை கிழிந்​திருந்​தது கண்​டறியப்​பட்​டது.

உடனே அவர் தீவிர சிகிச்​சைப் பிரிவுக்கு மாற்​றப்​பட்​டார். அங்​கு, அவருக்கு இருந்த ரத்​தக்கொதிப்பு கட்​டுப்​படுத்​தப்​பட்​டது. பின்​னர் பெருந்​தமனி வளைவு மாற்று அறுவை சிகிச்சை செய்ய முடிவு செய்​யப்​பட்​டது.

இதையடுத்​து, கடந்த 6-ம் தேதி இதய அறுவை சிகிச்​சைத் துறை இயக்​குநர் மாரியப்​பன் தலை​மையி​லான குழு​வினர் பெருந்​தமனி வளைவு மாற்று அறுவை சிகிச்​சையை வெற்​றிகர​மாக செய்​தனர்.

இந்த குழு​வில், உதவிப் பேராசிரியர் மருத்​து​வர் ஜெயப்​பிர​காஷ், மயக்க மருந்து நிபுணர்​கள் சும​தி, ஆஷா, முது​நிலை மருத்​துவ மாணவர்​கள், அறுவை சிகிச்சை செவிலியர் ஜமுனா மற்​றும் ரத்த ஓட்ட நிபுணர்​கள் லாவண்​யா, சுமதி ஆகியோர் இடம்​பெற்​றிருந்​தனர். தொழில்​நுட்ப ரீதி​யாக மிக​வும் சவாலான இந்த அறுவை சிகிச்​சை, சுமார் 10 மணி நேரம் நீடித்​தது.

அறுவை சிகிச்​சை​யின்​போது, மூளைக்கு செல்​லும் ரத்​தக் குழாய்​களும் மாற்​றப்​பட்​ட​தால், மூளைக்​கான ரத்த ஓட்​டம் பாதிக்​கப்​பட்டு சரிசெய்ய முடி​யாத நரம்​பியல் பாதிப்​பு​கள் ஏற்​படும் அபா​யம் இருந்​தது.

உடலின் மற்ற உறுப்​பு​களுக்கு செல்​லும் ரத்த குழாய்​களும் அறுவை சிகிச்சை செய்​யப்​பட்​ட​தால் முக்​கிய உறுப்​பு​களுக்கு ரத்த ஓட்​டம் நின்று உறுப்பு செயலிழப்பு அல்​லது கை, கால் இழப்பு ஏற்​படும் அபா​யம் ஏற்​பட்​டது. அதனால், மிக​வும்

கவனத்​துட​னும் துல்​லிய​மான தொழில்​நுட்​பத்​துட​னும் அறுவை சிகிச்சை மேற்​கொள்​ளப்​பட்​டது. இந்த அறுவை சிகிச்​சைக்​குப் பின்​னர், நோயாளிக்கு எந்​த​வித​மான நரம்​பியல் அல்​லது உறுப்பு பாதிப்​பு​களும் இன்றி குணமடைந்​து, வீட்​டுக்​குச் செல்ல தயா​ராகி வரு​கிறார். தமிழக அரசு மருத்​து​வ​மனை​யில் இத்​தகைய சிக்​கலான பெருந்​தமனி மாற்று அறுவை சிகிச்சை வெற்​றிகர​மாக செய்​யப்​பட்​டது இதுவே முதல் முறை​யாகும்.

இந்த நுட்​ப​மான அறுவை சிகிச்​சையை தனி​யார் மருத்​து​வ​மனை​யில் செய்ய வேண்​டு​மா​னால், குறைந்​தது ரூ.25 லட்​சம் வரை செல​வாகும். ராஜீவ்​காந்தி அரசு பொது மருத்​து​வ​மனை​யில், முதல்​வரின் விரி​வான மருத்​து​வக் காப்​பீட்​டுத் திட்​டத்​தின் கீழ் இந்த சிக்​கலான அறுவை சிகிச்சை முற்​றி​லும் இலவச​மாக செய்​யப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அவர்​கள்​ தெரிவித்​தனர்​.

<div class="paragraphs"><p>ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் பெருந்தமனி வளைவு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட தொழிலாளியுடன் இதய அறுவை சிகிச்சைத் துறை இயக்குநர் மாரியப்பன் தலைமையிலான மருத்துவக் குழுவினர்.</p></div>
புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாநில வள மையம்: அமைச்சர் அன்​பில் மகேஸ் தொடங்கி வைத்தார்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in