தாவர மூலங்களில் இருந்து புற்றுநோய் சிகிச்சைக்கு வாய்ப்பு: பாரதியார் பல்கலை. ஆராய்ச்சியாளருக்கு அங்கீகாரம்

பிரான்சிஸ் ஜெகன் ராஜ்

பிரான்சிஸ் ஜெகன் ராஜ்

Updated on
1 min read

கோவை: தாவர மூலங்​களில் இருந்து புற்று​நோய்க்கு சிகிச்சை அளிக்கும் ஆராய்ச்​சிக்காக கே.எஸ்​.எம்.ஓ சர்வதேச மாநாட்டு பயண மானியத்தை பாரதியார் பல்கலைக்கழக ஆராய்ச்​சி​யாளர் பெற்றுள்​ளார்.

கொரியன் சொசைட்டி ஆப் மெடிக்கல் ஆன்காலஜி என்பது மருத்துவ புற்று​நோ​யியல், புற்றுநோய் ஆராய்ச்சி மற்றும் மருத்துவ சிகிச்சைத் துறைகளின் முன்னேற்​றத்​துக்காக செயல்​பட்​டு​வரும் முக்கிய சர்வதேச அமைப்​பாகும்.

உலகின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆராய்ச்​சி​யாளர்கள், மருத்​து​வர்கள் மற்றும் புற்று​நோ​யியல் நிபுணர்கள் ஒன்றிணைந்து அறிவியல் தகவல்களை பரிமாறிக்​கொள்​ள​வும், புதிய சிகிச்சை முறைகள் குறித்து விவாதிக்​கவும் சர்வதேச அளவிலான ஆராய்ச்சி ஒத்துழைப்​புகளை உருவாக்​கவும் சிறந்த தளமாக அமைகிறது.

இளம் விஞ்ஞானி​களின் ஆராய்ச்​சித்​திறன் மற்றும் புதுமையான அறிவியல் ஆய்வு​களுக்கு கிடைத்​துள்ள அங்கீ​காரமாக, கோவை பாரதியார் பல்கலைக்​கழ​கத்தின் தாவரவியல் துறையில் ஆராய்ச்​சி​யாளராக பணியாற்​றிவரும் பிரான்சிஸ் ஜெகன் ராஜ், 2026-ம் ஆண்டு நடைபெறும் கொரியன் சொசைட்டி ஆப் மெடிக்கல் ஆன்காலஜி எனப்படும் கே.எஸ்​.எம்.ஓ சர்வதேச மாநாட்டில் கலந்து கொண்டு தனது ஆராய்ச்சிப் பணியை சமர்ப்பிப்​ப​தற்கான பயண மானியத்தை பெற்றுள்​ளார்.

இவர் போட்டித்​தேர்வு முறையின் மூலம் தேர்வு செய்யப்​பட்​டுள்​ளார். இது தொடர்பாக பிரான்சிஸ் ஜெகன் ராஜ் கூறும்​போது, “இயற்கைத் தாவர மூலங்​களில் இருந்து புற்றுநோய் சிகிச்​சைக்கான புதிய வாய்ப்​புகளை ஆராயும் சர்வதேச முக்கி​யத்​து​வத்தை இது எடுத்​துக்​காட்​டு​கிறது.

இயற்கைத் தாவர மூலங்​களில் இருந்து பெறப்​படும் உயிரியல் செயல்பாடு கொண்ட சேர்மங்களை கண்டறிதல், தன்மைப்​படுத்​துதல் மற்றும் மருத்துவ பயன்பாட்டு திறனை மதிப்பீடு செய்தல் ஆகியவை எனது ஆராய்ச்​சியின் முக்கிய நோக்கம்” என்றார்.

சர்வதேச மாநாட்டில் பிரான்சிஸ் ஜெகன் ராஜூடன், பாரதியார் பல்கலைக்கழக தாவரவியல் துறையை சேர்ந்த இரு ஆராய்ச்​சி​யாளர்களான அனிஷ் ரூபன் மற்றும் மேனகா ஆகியோர் பங்​கேற்று தங்களது ஆராய்ச்சி பணிகளை சமர்ப்​பிக்க உள்​ளனர்.

<div class="paragraphs"><p>பிரான்சிஸ் ஜெகன் ராஜ்</p></div>
ஷாங்காய் மாநாட்டில் பிரதமர் மோடி - ஈரான் அதிபர் வர்த்தக பேச்சுவார்த்தை நடத்தவில்லை: அமெரிக்கா தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in