காரைக்குடி அழகப்பா பல்கலை.யில் 7 கிணறுகளை மீட்ட பேராசிரியர்கள்!

காரைக்குடி அழகப்பா பல்கலை. முதுநிலை மாணவர்கள் விடுதியின் பின்புறம் சீரமைக்கப்பட்ட கிணறு. (உள்படம்) மு.நடராசன்.

காரைக்குடி அழகப்பா பல்கலை. முதுநிலை மாணவர்கள் விடுதியின் பின்புறம் சீரமைக்கப்பட்ட கிணறு. (உள்படம்) மு.நடராசன்.

Updated on: 
1 min read

காரைக்குடி: காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் பயன்பாடின்றி இருந்த 7 கிணறுகளை நாட்டுநலப் பணி திட்ட பேராசிரியர்கள் மீட்டனர்.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் உருவாவ தற்கு முன்பு அங்கிருந்த அழகப்பா கல்வி நிறுவனங்களில் பயின்ற மாணவர்களுக்கு தண்ணீர் வழங்க 7 கிணறுகளை அந்த வளாகத்தில் வள்ளல் அழகப்பச் செட்டியார் ஏற்படுத்தி இருந்தார்.

இந்த கிணறுகள் முதுநிலை ஆண்கள் விடுதி, கல்வியியல் கல்லூரி வளாகம், உமையாள் விளையாட்டு மைதானம், உடற்கல்வியியல் கல்லூரி உள்ளிட்ட 7 இடங்களில் உள்ளன.

காலப்போக்கில் கிணறு களில் குப்பை, கட்டுமானக் கழிவுகள் கொட்டப்பட்டு பயன்பாடின்றி இருந்தன. இந்நிலையில், அந்த கிணறுகளை நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மு.நடராசன் தலைமையில் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஜி.கோபு, மு.மகேந்திரபிரபு ஆகியோர் மீட்க முடிவு செய்தனர்.

ஆனால், அவை முழுவதும் மூடப்பட்டு, தண்ணீரின்றி இருந்தன. இதையடுத்து தூர்வார முடிவு செய்த அவர்கள், முன்னாள் மாணவர் சங்கமான அழகு மாணவர் சங்க கூட்டமைப்பை அணுகினர். அவர்கள் அளித்த ரூ.7 லட்சத்தில் மாணவர்கள் ஒத்துழைப்போடு கிணறுகளை தூர்வாரி சீரமைத்தனர்.

இதுகுறித்து நாட்டுநலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் மு.நடராசன் கூறியதாவது: முதுநிலை மாணவர்கள் விடுதியின் பின்புறம் 35 அடி ஆழக் கிணற்றை சீரமைத்து அங்குள்ள தோட்டத்துக்கு பயன்படுத்துகிறோம்.

கல்வியியல் கல்லூரி வளாக 35 அடி ஆழக் கிணற்றை சீரமைத்து பசுமை பணிக்கும், கல்லூரி கழிப்பறைக ளுக்கும் பயன்படுத்துகிறோம். உமையாள் விளையாட்டு மைதானத்தில் 30 அடி ஆழக் கிணற்றை சீரமைத்து, டர்ப் கிரிக்கெட் பசுமை புல்வெளியை பராமரிக்க பயன்படுத்துகிறோம்.

உடற்கல்வியியல் கல்லூரி ஆண்கள் விடுதியில் முன்புறம் இருந்த 60 அடி ஆழக் கிணற்றை விடுதி பயன்பாட்டுக்கும், தோட்டத்துக்கும் பயன்படுத்துகிறோம்.

அதேபோல், மற்ற கிணறுகளையும் பல்வேறு தேவைகளுக்கு பயன்படுத்து கிறோம். அதோடு, இந்த 7 கிணறுகள் மூலம் 27,000 மரக்கன்றுகள் நடப்பட்டு சொட்டுநீர் பாசனம் மூலம் தண்ணீர் பாய்ச்சுகிறோம்.

மேலும், நாட்டு நலப்பணித் திட்டக் குழுவினர் மூலம் கிணறுகளை பாதுகாக்கவும், குப்பையை கொட்டாமல் தடுக்கவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>காரைக்குடி அழகப்பா பல்கலை. முதுநிலை மாணவர்கள் விடுதியின் பின்புறம் சீரமைக்கப்பட்ட கிணறு. (உள்படம்) மு.நடராசன்.</p></div>
திருமண மோசடிகளை தடுக்கும் வகையில் மேட்ரிமோனி தளத்தில் ஆதார் மூலம் பயனர் சரிபார்ப்பு: தமிழக அரசு அனுமதி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in