பெண்கள் இளகிய மனதுடன் எப்போதும் இருக்கக் கூடாது: கோவை காவல் ஆய்வாளர் வ.நிர்மலா கருத்து

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் கோவையில் மகளிர் திருவிழா
‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) வளாகத்தில் நேற்று நடந்த மகளிர் திருவிழாவில் பேசிய கோவை மாநகர கிழக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் வ.நிர்மலா மற்றும் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை போலீஸார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) வளாகத்தில் நேற்று நடந்த மகளிர் திருவிழாவில் பேசிய கோவை மாநகர கிழக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் வ.நிர்மலா மற்றும் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை போலீஸார்.

படம்: ஜெ.மனோகரன்

Updated on
2 min read

கோவை: இளகிய மனதுடன் பெண்கள் எப்போதும் இருக்கக்கூடாது என, கோவையில் நடந்த மகளிர் திருவிழாவில் போக்குவரத்து பிரிவு காவல் ஆய்வாளர் வ.நிர்மலா பேசினார்.

‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் மகளிர் திருவிழா, கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) வளாகத்தில் நேற்று நடைபெற்றது. விழாவில் ‘இந்து தமிழ் திசை’ துணை செய்தி ஆசிரியரும், ‘பெண் இன்று’ பக்க பொறுப்பாளருமான பிருந்தா சீனிவாசன் வரவேற்றார். கோவை மாநகர கிழக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் வ.நிர்மலா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பெண்களின் பாதுகாப்பு குறித்து உரையாற்றினார்.

அவர் பேசும்போது, “ஒவ்வொரு மனிதரும், நேர்மறையோடு ஒவ்வொரு நாளையும் ஆரம்பிக்க விரும்புவோம். அது அனைவருக்கும் இயல்பான விஷயம். ஆனால் காவல்துறையினர் அப்படி நினைக்க முடியாது. சுய சுக, துக்கங்களை மறந்து வேலை செய்ய வேண்டும். சமூகத்தில் ஒரு கொலை நடந்தால், அதன் பின்னர் விசாரணை நடத்தி குற்றவாளிகளை கண்டுபிடித்துவிடலாம். ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் நடந்தால் குற்றத்துக்குரிய தண்டனையை வாங்கித்தருவது போலீஸாரின் வேலை. ஆனால் அதனை தடுக்க வேண்டியது, அதைவிட மிகவும் முக்கியம்.

ஈரோடு மாவட்டம் கருங்கல்பாளையம் காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நான் பணி செய்தபோது, சிறார் குற்றங்கள் அதிகளவில் இருந்தன. ஒவ்வொரு வழக்கிலும் விசாரித்தபோது தாய்- தந்தை பிரிந்த நிலையில், அவர்களின் குழந்தைகள் அதிகளவிலான குற்றங்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டது. குழந்தைகளுக்கு கட்டுப்பாடுடன் கூடிய வாழ்க்கை வாழ பிடிக்காது. அவர்களை நாம் முறைப்படுத்த வேண்டும். எல்லோரும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது, நாம் ஏன் கஷ்டப்பட வேண்டும் என்ற எண்ணம் தான், குழந்தைகளுக்கு எழும்.

இன்றைக்கு நாம் பயன்படுத்தும் செல்போன் ஆக்கத்துக்கும் பயன்படும். அழிவுக்கும் பயன்படும். அதனை நாம் எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில்தான் அதன் தன்மை உள்ளது. இந்த நிகழ்வில் இளம்பெண்கள் அதிகளவில் வந்துள்ளீர்கள். வாழ்க்கையில் எந்த நிலையிலும் உங்களை சலித்துக்கொள்ளாமல் பார்த்துக்கொள்ள பெற்றோர் இருக்கிறார்கள். இளகிய மனதுடன் பெண்கள் எப்போதும் இருக்கக்கூடாது. இதனால் சில நேரங்களில் அவர்களுக்கே பாதகமாக அமைந்துவிடும். பெண் வன்கொடுமைக்கு 181, குழந்தைகளுக்கான குற்றங்களுக்கு 1098, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு 1091 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்களுக்கு தகவல் அளித்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

<div class="paragraphs"><p>விழாவில் பங்கேற்ற வாசகியர். </p></div>

விழாவில் பங்கேற்ற வாசகியர்.

படம்: ஜெ.மனோகரன்

சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை காவல் உதவி ஆய்வாளர் அனிதா பேசும்போது, “கோவை மாநகரில் அதிகளவில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன. தொழில் நிறுவனங்களும் ஏராளமாக உள்ளன. இதில் அதிகளவில் பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். 13 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் சமூக வலைதள பயன்பாட்டை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். ‘பிங்க்’ ரோந்துப் படையை தொடர்ந்து, கோவை ஆர்.எஸ்.புரம் மற்றும் நவ இந்தியாவில் பெண்கள் புகார் அளிக்க வசதியாக ‘பிங்க் பூத்’ திறக்கப்பட்டுள்ளது. இதில் எப்போதும் புகார் அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.

உதயம் பருப்பு வகைகளைப் பயன்படுத்தி சுவையாக சமைத்து கொண்டு வரும் போட்டி அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி உதயம் பருப்பு வகைகளில் தயாரிக்கப்பட்ட உணவை பலரும் ஆர்வத்துடன் சமைத்து கொண்டுவந்தனர். அவர்களுக்கு உதயம் நிறுவனம் சார்பில் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன. வாசகியருக்கு ஃபேஷன் ஷோ, பலூன் உடைத்தல், கயிறு இழுத்தல் உள்ளிட்ட கலகலப்பான பல்வேறு போட்டிகளும் நடைபெற்றன. இதில் அனைத்து வயதினரும் உற்சாகமாக பங்கேற்றனர். சீரியல் மோகம், குழந்தை

வளர்ப்பில் பாகுபாடு, மதுவின் தீமைகள், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த ‘மைம்’ போட்டியும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்வை சின்னத்திரை தொகுப்பாளினி தேவிகிருபா தொகுத்து வழங்கினார். உதயம் இட்லி, அரிசி, பருப்பு வகைகள் நிறுவனத்துடன் இணைந்து ‘இந்து தமிழ் திசை’ இந்த விழாவை நடத்தியது. மேலும் லலிதா ஜூவல்லரி, பொன்மணி வெட்கிரைண்டர்ஸ், உதயகிருஷ்ணா நெய், விஸ்ருதா சில்வர் அன்ட் கோல்டு ஆகிய நிறுவனங்களும் நிகழ்ச்சியை இணைந்து வழங்கின. வென்யூ பார்ட்னர் இந்துஸ்தான் கல்லூரி, பிவெரேஜ் பார்ட்னர் கோத்தாஸ் காபி ஆகும். மகளிர் திருவிழாவில் பங்கேற்ற அனைத்து வாசகிகளுக்கும், மதிய உணவும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

<div class="paragraphs"><p>‘இந்து தமிழ் திசை’ நாளிதழின் ‘பெண் இன்று’ சார்பில் கோவை நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) வளாகத்தில் நேற்று நடந்த மகளிர் திருவிழாவில் பேசிய கோவை மாநகர கிழக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் வ.நிர்மலா மற்றும் சிங்கப் பெண் சிறப்பு அதிரடிப்படை போலீஸார்.</p></div>
பழநி முருகன் கோயில் சிவன் சன்னதிகளில் பொருத்த ரூ.2.22 கோடி மதிப்பிலான வெள்ளி நன்கொடை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in