இந்​தி​யரை மணந்து பிஹாரில் எளிமை​யாக வசிக்​கும் அமெரிக்க பெண்!

இந்​தி​யரை மணந்து பிஹாரில் எளிமை​யாக வசிக்​கும் அமெரிக்க பெண்!
Updated on
1 min read

பாட்னா: இந்​தி​யரை மணந்​து​கொண்ட பின்​னர் அமெரிக்காவிலிருந்து பிஹாருக்கு வந்து கிராமத்​தில் எளிமையான வாழ்க்​கையை வாழ்ந்து வரும் பெண்​மணி குறித்த செய்​தி​கள் இணை​யத்​தில் வைரலாகி வரு​கின்​றன.

அமெரிக்​கா​வின் அட்​லாண்டா மாகாணம் ஜார்​ஜி​யா​வில் வசித்து வந்த ஹோப் என்ற பெண், 2023-ல் பிஹாரைச் சேர்ந்த அபிஷேக் சிங்கை திருமணம் செய்து​கொண்டு கடந்த 2025-ம் ஆண்டு இந்தியா​வுக்கு வந்​தார்.

பிஹாரில் தனது குடும்​பத்​தா​ருடன் இந்திய கலாச்​சா​ரத்​தைப் பின்​பற்றி எளிமை​யான வாழ்க்​கையை வாழ்ந்து வரு​கிறார். அவருக்கு ஒரு மகன் உள்​ளான்.

இந்​திய உடைகளை அணிந்​து, இந்​திய நாட்டு பழக்க வழக்கங்களை ஹோப் கடைப்​பிடித்து வரு​கிறார். உணவு வகைகளைத் தயாரித்து அதை வீடியோ​வாக வெளி​யிட்டு அசத்தி வரு​கிறார். சமூக வலை​தளங்​களில் இடம்​பெற்​றுள்ள அவரது வீடிோயக்​கள் இந்​தி​யா​வின் அன்​றாட, எளிமை வாழ்க்​கையை படம்​பிடித்து காட்டு​கின்​றன.

இந்​தி​யரை மணந்து பிஹாரில் எளிமை​யாக வசிக்​கும் அமெரிக்க பெண்!
பிரதமர் மோடி​யின் ஃபிட்னஸ் ரகசியம்: முருங்​கைக்​கீரை ரொட்டி, யோகா, உடற்பயிற்சி!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in