சேலை கட்டிக்கொண்டு பிரேக்டான்ஸ் ஆடி அசத்திய நேபாள பெண்!

புடவை கட்டிக்கொண்டு பிரேக்டான்ஸ் ஆடும் பெண் | வீடியோ ஸ்க்ரீன் ஷாட்
புடவை கட்டிக்கொண்டு பிரேக்டான்ஸ் ஆடும் பெண் | வீடியோ ஸ்க்ரீன் ஷாட்
Updated on
1 min read

காத்மாண்டு: நேபாள நாட்டைச் சேர்ந்த பெண் ஒருவர் சேலை கட்டிக்கொண்டு துள்ளலாக பிரேக்டான்ஸ் ஆடி அசத்தியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளத்தில் மில்லியன் கணக்கான வியூஸ்களை பெற்று வைரலாகி உள்ளது. அவரது அசத்தலான நடனத்தைப் பார்த்து பார்வையாளர்கள் வியப்பில் ஆழ்ந்ததே அதற்குக் காரணம்.

இணைய வெளியில் தினந்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் ஸ்ட்ரீம் ஆகின்றன. அதில் சில மட்டுமே பரவலாக பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்று ஹிட் அடிக்கிறது. அந்த ஹிட் அடித்த வீடியோ வரிசையில் ஒன்றாக இணைந்துள்ளது இந்த வீடியோ.

சேலை கட்டியபடி பிரேக்டான்ஸ் ஆடியது நேபாள நாட்டின் நடன இயக்குநரும், நேபாள ஹிப்ஹாப் அறக்கட்டளை உறுப்பினருமான ஜெனீஷா. பலரும் கலந்து கொண்ட நிகழ்வு ஒன்றில் பிங்க் நிற புடவையும், ஹை ஹீல்ஸ் காலணியும் அணிந்தபடி படு வேகமாக நடன அசைவுகளை மேற்கொண்டு ஜெனீஷா கலக்கியுள்ளார்.

வழக்கமாக இந்த வகை நடனம் ஆடுபவர்கள் பேகி பேண்ட், ஸ்வெட் சூட், பேஸ்பால் கேப் போன்றவற்றை அணிந்து தான் ஆடுவார்கள். ஆனால், தனது செயல் மூலம் அதை தகர்த்துள்ளார் ஜெனீஷா. அவர் முன் வந்து ஆடிக் கொண்டிருந்த நேரத்தில் அவரை சூழ்ந்திருந்த பலரும் அவருக்கு ஊக்கம் கொடுப்பதையும் பார்க்க முடிந்தது. இந்த வீடியோ சுமார் 12.1 மில்லியன் பார்வையை பெற்றுள்ளது. 6 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் லைக் செய்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in