

புதுச்சேரி: ஆழ்கடலில் கிரிக்கெட் விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் வாழ்த்துகளை பகிர்ந்தனர்.
சென்னை அணிக்கும் குஜராத் அணிக்கும் இறுதிப் போட்டி நேற்று நடந்து முடிந்தது. அந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி பெற்று ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றியது. இறுதிப் போட்டியை ஏராளமான ரசிகர்கள் கண்டு ரசித்தனர். பலரும் வெற்றி பெற்றதை கொண்டாடி வருகின்றனர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்து கூறும் வகையில், ஆழ்கடல் நீச்சல் பயிற்சி பள்ளியை சேர்ந்த ஆழ்கடல் நீச்சல் வீரர்கள் அரவிந்தன் தலைமையில் புதுச்சேரி மற்றும் நீலாங்கரைக்கு இடையில் உள்ள 60 அடி ஆழ்கடல் பகுதியில் கிரிக்கெட் விளையாடி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.