Published : 13 Oct 2017 10:46 am

Updated : 13 Oct 2017 10:46 am

 

Published : 13 Oct 2017 10:46 AM
Last Updated : 13 Oct 2017 10:46 AM

இளையோர் உலகக் கோப்பை கால்பந்து: கோல் நாயகர்கள்!

லக விளையாட்டு உற்சவங்களில் ஒன்றான ஃபிபா உலகக் கோப்பை (சீனியர்) கால்பந்தாட்டத்தில் இந்தியா அடியெடுத்து வைக்குமா என்பதெல்லாம் யாருக்கும் தெரியாது. ஆனால், இந்தியாவின் ஜூனியர் கால்பந்து அணிக்கு அந்த வாய்ப்பு இப்போதே கிடைத்துவிட்டது. 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஃபிபா உலகக் கோப்பையை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் இந்தியாவுக்கு அந்தப் பொன்னான வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இந்தப் போட்டியில் இந்தியா சாதிக்குமா என்பதையெல்லாம் தாண்டி, களத்தில் விளையாடுவதே பெருமையான விஷயம்தான். அந்தப் பெருமைக்குரிய அணியில் 20 இளம் வீரர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். அவர்களில் சில டாப் வீரர்கள்:

அமர்ஜித் சிங் கியாம்


13CHDKN_AMARJIT_SINGH (2) அமர்ஜித் சிங் கியாம்

ந்திய அணியில் வட கிழக்கு மாநிலங்களிலிருந்து மட்டும் 10 வீரர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். இவர்களில் மணிப்பூரைச் சேர்ந்த அமர்ஜித் சிங் கியாம்தான் இந்திய அணியின் கேப்டன். ஏழ்மையான குடும்பத்தைச் சேர்ந்த இவர், கடின உழைப்பு, கால்பந்து மீதுள்ள காதலால் கேப்டனாக உயர்ந்திருக்கிறார். அவருடைய தந்தை சந்திரா மணி, சாதாரண விவசாயி. தாய் ஆஷாங்கி தேவி மீன் விற்பனையாளர். அமர்ஜித்துடன் சேர்ந்து குடும்பத்தில் 3 வாரிசுகள். இதில் கடைக்குட்டியான அமர்ஜித்துக்கு, கால்பந்தின் மீது ஆர்வம் ஏற்படுவதற்கு, அவருடைய தாய் மாமாதான் காரணம்.

சண்டிகர் கால்பந்து அகாடமியில் தொடக்க காலத்தில் பயிற்சி மேற்கொண்ட அமர்ஜித், இளையோர் கால்பந்துக்கான ஆரம்ப கட்டத் தேர்வுப் போட்டிகளிலேயே தேர்வாளர்களைக் கவர்ந்திருக்கிறார். இதனாலேயே கேப்டன் பதவியும் அவருக்கு வாய்த்தது. ஆனால், கேப்டன் பொறுப்பை தனக்குக் கிடைத்த மகுடமாகக் கருதவில்லை என்று அசால்டாகக் கூறுகிறார் அமர்ஜித்.

‘இந்திய இளையோர் அணியில் இருக்கும் அனைவருமே கேப்டன் பொறுப்பு வகிக்கத் தகுதியானவர்கள்’ என்று சொல்லி ஆச்சரியமூட்டுகிறார்.

சஞ்சீவ் ஸ்டாலின்

ணியில் இடம்பெற்றிருக்கும் மற்றொரு நம்பிக்கை நட்சத்திரம் பெங்களூருவைச் சேர்ந்த சஞ்சீவ் ஸ்டாலின். நடுகளத் தடுப்பாட்டக்காரர். சஞ்சீவுக்குக் கால்பந்து மீது காதல் ஏற்பட அவருடைய தந்தை ஸ்டாலின்தான் முக்கியக் காரணம். சிறு வயதிலிருந்தே தந்தையுடன் கால்பந்து பயிற்சிகளுக்குச் சென்றது, கால்பந்து மீது அவருக்கு ஈர்ப்பை ஏற்படுத்தியது. அர்ஜெண்டினாவுக்குக் கால்பந்து உலகக் கோப்பையைப் வென்று தந்த மரடோனாதான், சஞ்சீவின் ரோல் மாடல். ‘இந்திய அணியில் சஞ்சீவ் விளையாடுவது சக வீரர்களுக்கு உத்வேகத்தை அளிக்கும்’ என இளையோர் அணியின் பயிற்சியாளர் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். கால்பந்து விளையாட்டைப் பொறுத்தவரை வீரர் உதைக்கும் பந்து, எந்தத் திசையில் சுழலும் என்பதைப் பொறுத்தே எதிரணி வீரர்களின் வியூகம் அமையும். அந்த வகையில் பந்தை வெவ்வேறு திசைகளில் சுழலச் செய்யும் திறமை சஞ்சீவுக்கு உண்டு. அவரிடமிருந்து இந்திய அணி நிறைய எதிர்பார்க்கிறது.

dheeraj singh தீரஜ் சிங் rightதீரஜ் சிங்

ந்திய கால்பந்து அணியின் கோல் கீப்பரான தீரஜ் சிங்கின் சொந்த ஊர் மணிப்பூரில் உள்ள மொய்ராங். புத்தாயிரமாவது ஆண்டு ஜூலையில் பிறந்தவர். சிறு வயதில் பாட்மிண்டன் போட்டிகளில் ஆர்வம் செலுத்திய தீரஜ் சிங், 11 வயதுக்குப் பிறகுதான் கால்பந்துக்கு மாறினார். கால்பந்தில் புகழ்பெற்ற ரியல் மாட்ரிட் அணியின் தீவிர ரசிகரான இவர், இந்தியாவின் 16 வயது, 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவுகளில் கோல் கீப்பராக இருந்துள்ளார். இந்த உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு தீரஜைத் தங்கள் கிளப் அணிக்குத் தேர்வு செய்ய ஜெர்மனியின் இரண்டு அணிகள் தயாராக இருக்கின்றன. விரைவில் ஐரோப்பிய கால்பந்து கிளப் போட்டிகளில் தீரஜை நாம் பார்க்கலாம்.

பிரவீன் ராகுல்

கால்பந்து ரசிகர்கள் அதிகமுள்ள கேரளாவிலிருந்து அணியில் இடம்பிடித்த ஒரே வீரர் பிரவீன் ராகுல். திருச்சூரைச் சேர்ந்த இவர், இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரங்களில் ஒருவர். புத்தாயிரமாவது ஆண்டு மார்ச்சில் பிறந்தவர் பிரவீன். தன் அண்ணன் மூலம் கால்பந்து விளையாட்டில் குதித்தவர். சிறு வயதில் கால்பந்து வெறியராகத் திரிந்த ராகுலின் சகோதரர், பிரவீனையும் அப்படி மாற்றியதில் பெரிய ஆச்சரியமில்லை. கால்பந்தில் பெரிய அளவில் சாதிக்காத ராகுலின் சகோதரர் தற்போது ஆட்டோ ஓட்டுநராக இருக்கிறார். ஆனால், அவர் விட்டதை பிரவீன் பிடித்திருக்கிறார். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த பிரவீனின் பெற்றோர் அவரை எப்படியும் அரசு வேலைக்கு அனுப்ப வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால், காலம் அவரைக் கால்பந்து பக்கம் கரை சேர்த்துவிட்டது.

praveen rahul பிரவீன் ராகுல் முதல் கோல்!

மெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியில் இந்திய அணி கோல் எதுவும் அடிக்கவில்லை. கொலம்பியாவுக்கு எதிரான இரண்டாவது போட்டியில் இந்திய அணி ஒரு கோல் அடித்தது. மிக வலுவான அணிக்கு எதிராக விளையாடியபோதும் பதற்றமும் பயமும் இல்லாமல் இளங்கன்றுகள் புகுந்து விளையாடினார்கள்.

ஆட்டத்தின் 82-வது நிமிடத்தில் ஜியாக்சன் சிங் மேலே எழும்பி தலையால் முட்டி கோலடித்தார். 17 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் முதல் கோல் என்று வரலாற்றில் இடம்பிடித்தது இந்த கோல்.


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

இது காதல் நேரலை!

லைஃப் ஸ்டைல்
x