வடலூர் சத்திய ஞான சபையில் குவியும் ஆதரவற்றோர்: போதிய இடவசதி இல்லாததால் மரத்தடியில் தங்கும் அவலம்

வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் மரத்தடியில் தங்கியிருக்கும் ஆதரவற்றோர்.
வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் மரத்தடியில் தங்கியிருக்கும் ஆதரவற்றோர்.
Updated on
1 min read

கடலூர்: வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய சத்ய ஞான சபை உள்ளது. வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று கூறிய வள்ளலார், உண்ணஉணவின்றி யாரும் அவதியடையக் கூடாது என்ற உன்னத எண்ணத்தில் 1867-ம் ஆண்டு தர்ம சாலையை தொடங்கினார். அன்று முதல் இன்று வரை ஏழை,எளிய மக்களுக்கு மூன்று வேளையும் தொடர்ந்து உணவு வழங்கப்

படுகிறது. இன்று வரை அந்தஅடுப்பு அணையா அடுப்பாகதொடர்ந்து எரிந்து ஆயிரக்கணக்கானவர்களின் பசிப்பிணியை போக்கி வருகிறது. இங்கு மூன்று வேளையும்தரமான உணவு வழங்கப்படுவதாலும், விசாலமான இடம், கழிப்பறை, குளியலறை வசதிபோன்ற அடிப்படை வசதி இருப்பதால் ஆதரவற்றவர்கள், பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள், முதியவர்கள் என ஏராளமானோர் குவிந்து வருகின்றனர்.

அவர்கள் தங்குவதற்கு போதுமான இட வசதி இல்லாமல் மரத்தடியிலும், கட்டிடங்களுக்கு அருகேகொசுக்கடியிலும், மழை, வெயிலிலும் வசித்து வருகின்றனர். இதில் சிலர் யாசகம் கேட்டு தொந்தரவு செய்வதாகவும் கூறப்படுகிறது.

வடலூர் வள்ளலார் தெய்வ நிலையத்தை சர்வதேச மையமாக அறிவித்து அதற்கான நடவடிக்கையில் தமிழக அரசு இறங்கியுள்ளது.

இந்நிலையில் சத்திய ஞான சபை பகுதியில் பலர் மரத்தடியிலும், கட்டிட முகப்பு பகுதியில் தங்கியிருப்பது முகம் சுளிக்க வைக்கிறது. எனவே தமிழக அரசு சத்திய ஞான சபையில் தங்கி இருப்பவர்களை கணக்கெடுப்பு நடத்தி அவர்கள் தங்குவதற்கு இடவசதி செய்து தர வேண்டும் என்பதே அருட்பிரகாச வள்ளலார் பக்தர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in