

மதுரை: மதுரை அமெரிக்கன் கல்லூரியில், சிலம்பம், வளரி, கராத்தே ஆகிய தற்காப்பு கலைகளை தொடர்ந்து 2 மணி நேரம் விளையாடி, மாணவ, மாணவியர் சாதனை நிகழ்த்தினர்.
மதுரை அமெரிக்கன் கல்லூரி, இன்டர்நேஷனல் மாடர்ன் மார்ஷியல் ஆர்ட்ஸ் மற்றும் மதுரை மருது வளரி சங்கம் இணைந்து நடத்திய இந்த நிகழ்வை, அமெரிக்கன் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். துணை முதல்வர் மார்ட் டின் டேவிட் முன்னிலை வகித்தார்.
இதில், மாஸ்டர் மு.முத்துமாரி தலைமையில் 250-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்று, கராத்தே, சிலம்பம், வளரி ஆகியவற்றை விளையாடி சாதனை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் பங்கேற்ற மாணவ, மாணவிகளுக்கு காவல் உதவி ஆணையர்கள் அ.சூரக்குமார், ஜஸ்டின் பிரபாகரன் ஆகியோர் சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கிப் பாராட்டினர்.