Published : 06 May 2023 04:00 AM
Last Updated : 06 May 2023 04:00 AM

கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் நாளை முதல் தி இந்து நாளிதழ் சார்பில் கார் ஃப்ரீ சன்டே விழா மீண்டும் தொடக்கம்

கோவை: ‘தி இந்து’ நாளிதழ் சார்பில் ‘கார் ஃப்ரீ சன்டே’ விழா, கோவையில் நாளை (7-ம் தேதி) முதல் ரேஸ்கோர்ஸ் சாலையில் மீண்டும் நடக்கிறது.

‘தி இந்து’ நாளிதழ் சார்பில் ‘கார் ஃப்ரீ சன்டே’ விழா சென்னையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் நாளை காலை 6 மணி முதல் 9 மணி வரை‘கார் ஃப்ரீ சன்டே’ விழா நடக்கவுள்ளது. கோவை மாநகராட்சி நிர்வாகம், மாநகர காவல்துறை ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இவ்விழா நடத்தப்படுகிறது.

இவ்விழாவில், பொதுமக்களை கவரும் வகையில், நேரடி இசை நிகழ்ச்சிகள், உடற்பயிற்சி நிகழ்வுகள், உடல்நல ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை மையமாக கொண்டு, குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கான பல வேடிக்கையான நிகழ்வுகள் இடம் பெறுகின்றன. இவ்விழாவில் யோகா பயிற்சி, நடன உடற்பயிற்சி முறைகள், பீட் பாக்ஸிங் அமர்வுகள், குழந்தைகளின் திறனை மேம்படுத்தும் வகையிலான போட்டிகள், ஸ்கேட்டிங் செய்தல், சைக்கிள் ஓட்டுதல் உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்வுகள் நடத்தப்பட உள்ளன.

இவ்விழாவில் ஸ்போர்ட்ஸ் பார்ட்னராக டெகத்லான், ஈவென்ட்பார்ட்னராக பிஏஎம், என்டர்டெயின்மென்ட் பார்ட்னராக ஃபுட் லூஸ், அகாடமி பார்ட்னராக ஆர்.ஏ.ஆர்.எஸ், கம்யூனிட்டி பார்ட்னராக ஆர்ஏஏசி ‘அழகான கோவை', என்.ஜி.ஓ பார்ட்னராக வி வொண்டர் வுமன், போட்டோ கிராபி பார்ட்னராக கேமாஃப்லேஜ்கிளிக்ஸ் போட்டோ கிராபி, ஸ்டோரி டெல்லிங் பார்ட்னராக ஏசிஐடி, ரேடியோ பார்ட்னராக ரேடியோ சிட்டி, டிவி பார்ட்னராக புதிய தலைமுறை ஆகியவை உள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x