மகன் நிக்கோலஸ் மற்றும் மகள் வில்லியன் ஆகியோருடன் ஆட்டோவில் வலம் வரும் கனடாவைச் சேர்ந்த கிளிண்டன்

மகன் நிக்கோலஸ் மற்றும் மகள் வில்லியன் ஆகியோருடன் ஆட்டோவில் வலம் வரும் கனடாவைச் சேர்ந்த கிளிண்டன்.
மகன் நிக்கோலஸ் மற்றும் மகள் வில்லியன் ஆகியோருடன் ஆட்டோவில் வலம் வரும் கனடாவைச் சேர்ந்த கிளிண்டன்.
Updated on
1 min read

புதுச்சேரி: இந்திய அழகை காண ஆட்டோவில் நெடுந்தொலைவு சுற்றுலா வரும் கனடா நாட்டு பயணி குடும்பம், தற்போது புதுச்சேரியில் வலம் வருகின்றனர். அவர்கள் பல்வேறு பகுதிகளை ஆர்வத்துடன் கண்டு வருகின்றனர்.

கனடாவைச் சேர்ந்த ஏல நிறுவனர் கிளிண்டன், அவரது மகன்நிக்கோலஸ் மற்றும் மகள் வில்லியன் ஆகியோர் இப்பய ணத்தில் ஈடுபட்டுள்ளனர்.

குளிர்ச்சியான பகுதியிலிருந்து தங்கள் பயணத்தை தொடங்கிய இவர்கள், தற்போது வெப்பம் தகிக்கும் இக்காலத்திலும் சலிப்பில்லாமல் தங்கள் பயணத்தை தொடர்கின்றனர். “உடல் ஒத்து ழைக்காவிட்டாலும் பயணம் பிடிக்கிறது” என்கின்றனர்.

இந்த ஆட்டோ பயணம் தொடர் பாக கிளிண்டன் கூறுகையில், "கனடாவிலிருந்து முதலில் கேரள மாநிலம் கொச்சினுக்கு வந்தோம். அங்கிருந்து ஆட்டோ ரிக்சா மூலம் இந்தியாவை வலம் வர முடிவு எடுத்தோம்.

அதற்காக பெறப்பட்ட ஆட்டோவில், மேலும் ரூ. 1.25 லட்சம் செலுத்தி ஆட்டோவில் அதிநவீன வைபை, விளக்குகள் பொருத்தி நவீனப்படுத்தினோம். அந்த ஆட்டோவை நானும், எனது மகனும் ஓட்டியப்படி தமிழகத்தில் பல ஊர்களை பார்த்து, தற்போது புதுச்சேரிக்கு வந்திருக்கிறோம்.

கேரளம், தமிழகம், புதுச்சேரி என ஒவ்வொரு பகுதியும் வெவ்வேறாக உள்ளன. முதலில் எங்களை அதிசயக்க வைத்தது யானையும், குரங்குகளும்தான். கனடாவில் நாங்கள் குரங்குகளைப் பார்த்தது இல்லை.

கனடாவில் குளிர் என்பது பூஜ்யத்தை தாண்டிச் செல்லும். இங்கோ வெப்ப நிலை அதிக உச்சத்தில் இருக்கிறது. இவ்வளவு வெப்பத்தில் மக்கள் வாழ்வது எங்களை அதிசயிக்க வைக்கிறது. ஆனாலும் இவர்களின் வாழ்க்கை முறை பிடித்துப் போகிறது.

அடுத்து ஆந்திரம், கர்நாடகம் என இமாச்சல பிரதேசம் வரை சென்று கொச்சின் திரும்பி, அங்கிருந்து கனடாவிற்கு திரும்ப இருக்கிறோம். ஓவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாட்டைத் தேர்வு செய்து பயணிப்பது வழக்கம். இம்முறை ஆட்டோவில் இந்தியப் பயணம் வித்தியாசமாக அமைந்திருக்கிறது. எங்கள் வாழ்வில் மறக்க முடியாத ஒரு அனுபவமாக இது இடம் பெற்றுள்ளது" என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in