​ப்ரஸன்னா ராமஸ்வாமியின் நாடகம் அரங்கேறும் இடம் மாற்றம்: ஆழ்வார்பேட்டையில் நடைபெறும்

ப்ரஸன்னா ராமஸ்வாமியின் ‘68, 86, 45 12 லட்சம்’ நாடகத்தில் ஒரு காட்சி.
ப்ரஸன்னா ராமஸ்வாமியின் ‘68, 86, 45 12 லட்சம்’ நாடகத்தில் ஒரு காட்சி.
Updated on
1 min read

ப்ரஸன்னா ராமஸ்வாமியின்‘68, 86, 45 12 லட்சம்’ என்ற தமிழ் நாடகம் அரங்கேறும் இடம் மாற்றப்பட்டுள்ளது. இந்நாடகம் சென்னை ஆர்ட் தியேட்டர் சார்பில் ஆழ்வார்பேட்டை மேடை அரங்கத்தில் வரும் 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு அரங்கேற்றப்படுகிறது.

நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய இயற்கையின் 5 கூறுகளை வைத்து, பட்டியலின மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை அடிப்படையாகக் கொண்டு ‘68, 86, 45 12 லட்சம்’ என்ற நாடகத்தை எழுதி இயக்கியுள்ளார் ப்ரஸன்னா ராமஸ்வாமி.

இந்நாடகம், பட்டியலின மக்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளைக் களைய அம்பேத்கரின் கருத்துகளை உள்வாங்கி, அவர் காட்டிய திசையில் பயணிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

இந்நாடகம் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் சார்பில் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை 6 மணிக்கு சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை திருவாவடுதுறை ராஜரத்தினம் அரங்கத்தில் அரங்கேற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது நாடகம் நடைபெறும் இடம், நேரம் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி இந்நாடகம் ஆழ்வார்பேட்டை மேடை அரங்கத்தில் ஏப்ரல் 14-ம் தேதி இரவு 7 மணிக்கு அரங்கேற்றப்படும். இந்நாடகத்தை சென்னை ஆர்ட் தியேட்டர் வழங்குகிறது.

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கரின் 132-வது பிறந்தநாளை முன்னிட்டு ‘68, 86, 45 12 லட்சம்’ தமிழ் நாடகம் மீண்டும் மேடையேறுகிறது. பார்வையாளர்களுக்கு அனுமதி இலவசம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in