வழிபாட்டின்போது தன் மீது பாய்ந்த பூனையை இமாம் அணுகிய விதம் - நெட்டிசன்களின் நெஞ்சங்களை வென்ற வீடியோ

வீடியோ ஸ்க்ரீன்ஷாட்
வீடியோ ஸ்க்ரீன்ஷாட்
Updated on
1 min read

இஸ்லாமியர்கள் ரமலான் நோன்பு இருக்கும் காலம் இது. இந்தச் சூழலில் திரளானவர்கள் ஒன்று கூடி மசூதியில் வழிபாடு செய்கின்றனர். அதை முன்னின்று நடத்தும் இமாம் மீது பூனை ஒன்று பாய்கிறது. அதைத் தொடர்ந்து அவர் மேற்கொண்ட உன்னத செயல் பரவலான இணையவாசிகளை கவர்ந்துள்ளது. அந்த வீடியோவை பலரும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இணைய வெளியில் தினந்தோறும் லட்சக்கணக்கான வீடியோக்கள் ஸ்ட்ரீம் ஆகின்றன. அதில் சில மட்டுமே பரவலாக பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்று ஹிட் அடிக்கிறது. அந்த ஹிட் அடித்த வீடியோ வரிசையில் ஒன்றாக இணைந்துள்ளது இந்த வீடியோ.

அல்ஜீரியாவில் உள்ள பார்ஜ் பூ அரேரஜ் (Bordj Bou Arréridj) நகரில் இந்த வீடியோ எடுக்கப்பட்டதாக தகவல். வழிபாட்டின் போது பூனை ஒன்று இமாம் மீது பாய்கிறது. அவர் பூனையை விரட்டாமல் அரவணைக்கிறார். அதேநேரத்தில் வழிபாட்டையும் நிறுத்தவில்லை. சில நொடிகளில் அந்தப் பூனை அவரிடமிருந்து சென்றுவிடுகிறது. அதுதான் இப்போது சமூக வலைதளத்தில் பரவலாக கவனம் பெற்றுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in