

ஹைதராபாத்: கடந்த 12 மாதங்களில் சுமார் 6 லட்ச ரூபாய்க்கு ஸ்விகி உணவு டெலிவரி செயலியில் இட்லி மட்டுமே ஆர்டர் செய்துள்ளார் ஹைதராபாத் பகுதியை சேர்ந்த பலே வாடிக்கையாளர் ஒருவர். உலக இட்லி தினத்தை (மார்ச் 30) முன்னிட்டு இந்த ருசிகர தகவலை ஸ்விகி பகிர்ந்துள்ளது.
இட்லியின் புகழை போற்றும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 30-ம் தேதி ‘உலக இட்லி தினம்’ கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2015 முதல் இந்த கொண்டாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஸ்விகி நிறுவனம் தங்கள் தளத்தில் இட்லி விற்பனை சார்ந்த கடந்த ஓராண்டு கால மொத்த டேட்டாவை பகிர்ந்துள்ளது.