Published : 29 Mar 2023 11:34 AM
Last Updated : 29 Mar 2023 11:34 AM
கொல்லம்: கேரள மாநிலம் கொல்லம் கோட்டங்குளங்கரா சமயவிளக்குத் திருவிழாவில் சிறந்த ஒப்பனைக்காக முதல் பரிசு வென்ற பெண் வேடமிட்ட ஆணின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்தியா அதன் கலாச்சாரம், பாரம்பரியம் போல் திருவிழாக்களுக்காகவும் அறியப்படுகிறது. இங்கு ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒவ்வொரு மதத்திற்கும் பல்வேறு திருவிழாக்கள் இருக்கின்றன. அதில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம். சில திருவிழாக்கள் மதம் தாண்டி மக்களை ஒருங்கிணைக்கூடியது. சில திருவிழாக்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும். அப்படியொரு திருவிழாதான் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நடைபெறும் சமயவிளக்குத் திருவிழா. இந்தத் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். அதுவல்ல இதன் பிரபல்யத்திற்குக் காரணம். இத்திருவிழாவில் ஆண்கள் தங்கள் நேர்த்திக்கடன் நிறைவேற வேண்டி பெண் வேடமிட்டு பிரார்த்தனை செய்வார்கள். அதுதான் இந்தத் திருவிழாவின் சிறப்பம்சம்.
அந்த வகையில் இந்த ஆண்டு நடந்த திருவிழாவின்போது பெண் வேடமிட்டு பிரார்த்தனை செலுத்திய ஆண் ஒருவரின் புகைப்படத்தைப் பகிர்ந்த இந்திய ரயில்வே துறை அதிகாரி இணையவாசிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளார். அனந்த் ரூபானகுடி என்ற அந்த அதிகாரி அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்த சமயவிளக்குத் திருவிழா புகைப்படம் வைரலாகி வருகிறது.
The Devi Temple in Kottamkulakara in Kollam district in Kerala has a tradition called the Chamayavilakku festival.
This festival is celebrated by men who are dressed as women. The above picture is that of the man who won the first prize for the make up In the contest. #festival pic.twitter.com/ow6lAREahD— Ananth Rupanagudi (@Ananth_IRAS) March 27, 2023
அவர் தனது பதிவில் "கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தின் கோட்டங்குலக்கராவில் தேவி கோயில் உள்ளது. இங்கு சமயவிளக்குத் திருவிழா நடைபெறுவது வழக்கம். இத்திருவிழாவில் ஆண்கள் பெண் வேடமிட்டு கலந்து கொள்வார்கள். இங்கே நீங்கள் பார்க்கும் பெண் வேடமிட்ட இந்த ஆண் தான் இவ்வாண்டு இத்திருவிழாவில் சிறந்த அலங்காரத்திற்காக முதல் பரிசு வென்றவராவார்" என்று குறிப்பிட்டிருந்தார்.
கேரள சுற்றுலாத் துறை இணையதளத்தில் இந்தத் திருவிழா பற்றி, கோட்டங்குலங்கரா சமயவிளக்குத் திருவிழா ஒரு வகையான தீபத் திருவிழா. இது மலையாள காலாண்டரில் மீனம் மாதத்தில் 10 மற்றும் 11 தேதிகளில் கொண்டாடப்படும். அதாவது ஆங்கில நாட்காட்டியில் மார்ச் இரண்டாம் பாதியில் இத்திருவிழா வரும். இந்தத் திருவிழாவில் கலந்து கொள்ளும் ஆண்கள் விதவிதமா சேலைகள், சுடிதார்கள் உள்ளிட்ட பெண்களின் ஆடைகள், கண்கவர் அணிகலன்கள், சிகை அலங்காரம் என முழுமையாக தங்களை பெண்களாக அலங்கரித்துக் கொள்வார்கள். பின்னர் கையில் கேரள பாரம்பரிய விளக்கு ஏந்தி கோயிலை சுற்றி வருவார்கள். இதன் மூலம் தங்கள் நேர்த்திக்கடனை அவர்கள் நிறைவேற்றுவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், இந்தத் திருவிழா தான் கேரளாவில் திருநங்கைகள் அதிகம் கூடும் திருவிழாவாகவும் இருக்கிறது.
இந்நிலையில் அண்மையில் நடந்து முடிந்த இந்தத் திருவிழாவின் புகைப்படங்களும், வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த இணையவாசி ஒருவர், "என் ஆவல் எல்லாம் இவர்களின் உண்மைத் தோற்றம் எப்படியிருக்கும் என்பதையும் காண வேண்டும் என்பதே. என் கண்களை என்னாலேயே நம்ப முடியவில்லை. ஆச்சர்யம் விலகவில்லை" என்று பதிவிட்டுள்ளார்.
Here is a video that's getting viral from this unique tradition pic.twitter.com/3qKHA7ggzk
— Arvind (@tweet_arvi) March 27, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT