கேரள மாநில பார் கவுன்சிலில் வழக்கறிஞராக பதிவு செய்த முதல் திருநங்கை பத்ம லட்சுமி!

முதல் திருநங்கை வழக்கறிஞர் பத்ம லட்சுமி
முதல் திருநங்கை வழக்கறிஞர் பத்ம லட்சுமி
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கேரள மாநில பார் கவுன்சிலில் முதல் திருநங்கை வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டுள்ளார் பத்ம லட்சுமி என்ற திருநங்கை. அவரை அம்மாநில தொழில் துறை அமைச்சர் ராஜீவ் வாழ்த்தியுள்ளார். ஞாயிறு அன்று அம்மாநில பார் கவுன்சிலில் பதிவு செய்து கொண்ட சுமார் 1,500 வழக்கறிஞர்களுக்கு ஞாயிறு அன்று சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. அதில் திருநங்கை பத்ம லட்சுமியும் ஒருவர் எனத் தெரிகிறது.

"தன் வாழ்க்கையில் பல்வேறு தடைகளை கடந்து வந்து கேரளாவின் முதல் திருநங்கை வழக்கறிஞராக பதிவு செய்த பத்ம லட்சுமிக்கு எனது வாழ்த்துகள். முதல் நபர்கள் வரலாற்றில் இடம் பிடிப்பது எப்போதும் மிக கடினமான சாதனையாகும். இலக்கை நோக்கி செல்லும் போது வழிகாட்டிகள் தேவையில்லை. தடைகள் தவிர்க்க முடியாதவை. அதையெல்லாம் கடந்தே சட்ட வரலாற்றில் பத்மா லட்சுமி தன் பெயரை பதிவு செய்துள்ளார்.

அவரது வெற்றி மூன்றாம் பாலினத்தவர்கள் வழக்கறிஞர் பணியை நோக்கி ஈர்க்க செய்யலாம்” என அமைச்சர் ராஜீவ் தெரிவித்துள்ளார். பத்ம லட்சுமியின் இந்த சாதனையை சமூக வலைதளத்தில் பலரும் வாழ்த்தியும், பாராட்டியும் வருகின்றனர்.

இந்திய நாட்டில் கடந்த 2017-ல் மேற்கு வங்க மாநிலத்தில் ஜோயிதா மோண்டல் என்ற முதல் திருநங்கை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2018-ல் மகாராஷ்டிராவின் நாக்பூரில் வித்யா காம்ப்ளே மற்றும் குவாஹாட்டியை சேர்ந்த ஸ்வாதி பிதான் பருவா என்ற திருநங்கையும் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in