Published : 18 Mar 2023 10:15 AM
Last Updated : 18 Mar 2023 10:15 AM

30 ரூபாயில் 100 கி.மீ பயணம்: நானோ காரை சோலார் காராக மாற்றிய நபர்

பிரதிநிதித்துவப் படம்

பாங்குரா: 30 ரூபாயில் 100 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்யும் வகையில் நானோ காரை சூரிய சக்தியில் இயங்கும் வகையில் வடிவமைத்துள்ளார் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த தொழிலதிபர் மனோஜித் மோண்டல். உலகம் முழுவதும் சூழலுக்கு மாசில்லாத மின்சார வாகன பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில் அவரது இந்த முயற்சி கவனம் பெற்றுள்ளது.

பெட்ரோல், டீசல், சிஎன்ஜி என எதுவும் மனோஜித் காருக்கு தேவையில்லை. முழுவதும் சூரிய சக்தியில் இந்த கார் இயங்குகிறதாம். தற்போது தனது சோலார் காரில் பாங்குரா நகரில் வலம் வந்துக் கொண்டுள்ளார். பலரும் அவரை வியப்புடன் பார்ப்பதாக தகவல்.

இந்த காரில் 100 கிலோமீட்டர் தூரம் பயணம் பயணம் செய்ய 30 முதல் 35 ரூபாய் மட்டுமே செலவு பிடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிலோமீட்டருக்கு வெறும் 80 பைசா மட்டுமே செலவாகும். இதில் என்ஜின் இல்லை. கியர் சிஸ்டத்தில் இயங்குகிறது. நான்காவது கியரில் மணிக்கு 80 கிலோமீட்டர் வேகத்தில் இதில் பயணிக்கலாம் என தெரிகிறது. இந்த காரை இயக்கும் போது எந்தவித சத்தமும் இருக்காதாம்.

சிறுவயதில் இருந்தே ஏதேனும் புதிதாக செய்ய வேண்டுமென்ற நோக்கத்துடன் மனோஜித் இருந்துள்ளார். தற்போது அதனை அவர் எட்டியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x