சென்னையில் யுகாதி விருந்து

சென்னையில் யுகாதி விருந்து
Updated on
2 min read

ஒரு யுகத்தின் தொடக்கமாகக் கருதப்படும் யுகாதி பண்டிகை, தென்னிந்தியாவின் முக்கிய பண்டிகைகளில் ஒன்று. ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் யுகாதி புத்தாண்டின் தொடக்கமாகக் கொண்டாடப்படுகிறது. யுகாதி பண்டிகை மட்டுமல்ல; யுகாதி அன்று செய்யப்படும் செய்யப்படும் உணவு வகைகளும் சிறப்புமிக்கவையாக, தனித்துவமானவையாக உள்ளன.

யுகாதியின் உற்சாகத்தை நமக்கும் பரப்பும் விதமாக, மார்ச் 22, 2023 அன்று சென்னை அமேதிஸ்டில் உள்ள வைல்ட் கார்டன் கஃபேயில் பாரம்பரிய யுகாதி விருந்தை 'ஆந்திர டெலி’ எனும் உணவு நிறுவனம் வழங்க உள்ளது.

யுகாதி சைவ விருந்தில் வழங்கப்படும் உணவு வகைகள்:

உகாதி பச்சடி, பூரேலு, உல்லி கரேலு, மாமடிக்கயா புலிஹோரா, தோசக்காயா பச்சடி, தொண்டக்காயா முந்திரி வெப்புடு, பங்களாடும்பா பட்டாணி வெப்புடு, குட்டி வங்கயா, கும்மடிக்காய கூர, பெசவாடா பப்புச்சாரு, தக்காளி சாரு, பாயசம்

யுகாதி அசைவ விருந்தில் வழங்கப்படும் உணவு வகைகள்:

உகாதி பச்சடி, பூரேலு, உல்லி கரேலு, தோசக்காயா பச்சடி, தொண்டக்காயா முந்திரி வெப்புடு, குண்டூர் சிக்கன் வெப்புடு, இறால் மிளகு வறுவல், ராயலசீமா மட்டன் கறி, பெசவாடா பப்புச்சாரு, நெல்லூர் மீன் கறி, தக்காளி சாறு, பாயசம்

சைவம், அசைவம் எனத் தனித்தனியாக வழங்கப்படும் இந்த விருந்துக்குக் கட்டணம் உண்டு. முன்பதிவு செய்தவர்களுக்கு மட்டுமே இந்த விருந்தில் பங்கேற்க அனுமதி உண்டு.

கூடுதல் விவரங்களுக்கும் முன்பதிவுகளுக்கும் 7550009207 எனும் அலைப்பேசி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in