மகளிர் தினம் | பல்துறையில் பெண்களின் பங்களிப்பை போற்றும் சுதர்சன் பட்நாயக்கின் மணற் சிற்பம்

சுதர்சன் பட்நாயக்கின் மணற் சிற்பம்
சுதர்சன் பட்நாயக்கின் மணற் சிற்பம்
Updated on
1 min read

பூரி: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பல்துறையில் பெண்களின் பங்களிப்பை போற்றும் விதமாக பிரபல மணற் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக், ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில் உள்ள கரையோர மணலை பயன்படுத்தி மணற் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.

மார்ச் 8-ம் தேதியான இன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுதர்சன் பட்நாயக் இந்த சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.

குழந்தையை அரவணைக்கும் தாயாக, மருத்துவராக, காவல் துறை அதிகாரியாக, ராணுவ வீராங்கனையாக என பல்துறையில் பெண்களின் பங்களிப்பை போற்றும் வகையில் இந்த சிலையை அவர் வடிவமைத்துள்ளார். அனைத்து பெண்களையும் வணங்குவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், வண்ணங்களின் திருவிழாவான ஹோலி பண்டிகையை குறிப்பிடும் வகையில் இதில் பல்வேறு வண்ணங்களை அவர் சேர்த்துள்ளார்.

“அனைவருக்கும் எனது வாழ்த்துகள். உலகில் அன்னையின் சக்தி மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்புவதில் அவர்களது பங்களிப்பு எப்போதும் முதன்மையானது. வாருங்கள், பெண்களின் சக்தியை மதிக்கவும், பாதுகாக்கவும், அதிகாரமளிக்கவும் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்” என அவர் ட்வீட் செய்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in