கும்பகோணம் மாசிமகம்: பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கிய இஸ்லாமிய அமைப்பினர்

அன்னதானம் வழங்கிய இஸ்லாமிய அமைப்பினர்
அன்னதானம் வழங்கிய இஸ்லாமிய அமைப்பினர்
Updated on
1 min read

கும்பகோணம்: மாசிமகத்தை யொட்டி கும்பகோணத்திற்கு வந்த தொப்புள் கொடி உறவுகளுக்கு இஸ்லாமிய அமைப்பினர் அன்னதானம் வழங்கினர்.

கும்பகோணம் மாசிமகத்தையொட்டி இஸ்லாமிக் சோஷியல் வெல்பேர் அசோசியேசன் சார்பில், மகாமக விழாவிற்கு வந்தவர்களுக்கு, காசி விஸ்வநாதர் கோயில் வடக்கு வீதியில் அன்னதானம் வழங்கப்பட்டது. ஆண்டுதோறும் நடைபெறும் இவ்விழாவிற்கு வருகை தரும் தமிழகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து தொப்புள்கொடி உறவுகளுக்கு அன்னதானம் வழங்க அந்த அமைப்பின் சார்பில் முடிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.

இதனையடுத்து இன்று நடைபெற்ற அன்னதான நிகழ்ச்சிக்கு தலைவர் ஜே.ஜாஹிர்உசேன் தலைமை வகித்து, நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு, பல்வேறு வகையான சாதம், குடிநீர் பாட்டில்களை வழங்கினார். இந்த நிகழ்வில், நிர்வாகிகள் அபுல் கலாம் ஆசாத், கே. ஜாஹிர் உசேன், அ.சிராஜிதீன், ஏ.பசீர் அகமது உள்பட பலர் பங்கேற்று உணவுகளை வழங்கினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in