ஆபத்தில் உதவியவருக்கு விசுவாசம்: உ.பி.யில் எங்கு சென்றாலும் பறந்து வரும் பாசக்கார நாரை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

அமேதி: உத்தர பிரதேசம் மாநிலம் அமேதி மாவட்டம் மந்த்கா மஜ்ரே அவுரங்காபாத் கிராமத்தைச் சேர்ந்தவர் முகமது ஆரிப். கடந்தாண்டு வயல்வெளியில் நாரை கால் உடைந்து தவித்துக் கொண்டிருந்தது. அதை வீட்டுக்கு தூக்கி சென்று கட்டு போட்டார் ஆரிப். அது குணமடையும் வரை அதற்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்கினார். குணமடைந்தபின் அதை வனப்பகுதிக்கு சென்று பறக்கவிட்டார். ஆனால் அந்த நாரை முகமது ஆரிப் வீட்டுக்கு திரும்பி வந்து, அவரது வீட்டிலேயே நிரந்தரமாக தங்கியது.

அவர் இரு சக்கர வாகனத்தில் 40 கி.மீ தூரம் சென்றால் கூட, அந்த நாரை, அவருக்கு மேலே பறந்து செல்கிறது. அந்த அளவுக்கு முகமது ஆரிப்புக்கும், நாரைக்கும் இடையே பிணைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ வைரலாக பரவியுள்ளது. சமூக ஊடகங்களில் இந்த வீடியோவை பார்ப்பவர்கள், உண்மையான ஜெய்-வீரு இவர்கள்தான் எனகூறுகின்றனர். ஷோலே படத்தில் ஜெய்-வீரு என்ற இரு கதாநாயகர்களும் இணை பிரியாமல் இருப்பது போல் ஆரிப்பும் - நாரையும் எப்போதும் சேர்ந்து காணப்படுகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in