Published : 24 Feb 2023 06:38 PM
Last Updated : 24 Feb 2023 06:38 PM

புள்ளினங்காள் | தன்னைக் காத்த நபரோடு நட்பு பாராட்டும் பறவை: வைரல் வீடியோ

ஸ்க்ரீன் ஷாட்

அமேதி: ஸ்கூட்டர் ஓட்டிச் செல்லும் நபர் ஒருவரை பறவை ஒன்று பின்தொடர்ந்து செல்கிறது. சுமார் 60 நொடிகளுக்கு மேல் ரன் டைம் கொண்ட இந்த வீடியோவை ஐஏஎஸ் அதிகாரி அவனிஷ் ஷரன் பகிர்ந்துள்ளார். இப்போது அது வைரலாகி உள்ளது. அந்த நபருக்கும், அந்த பறவைக்கும் இடையே நட்பு ரீதியிலான உறவு எப்படி ஏற்பட்டது என்பதைப் பார்ப்போம்.

இணைய வெளியில் தினந்தோறும் லட்ச கணக்கான வீடியோக்கள் ஸ்ட்ரீம் ஆகின்றன. அதில் சில மட்டுமே பரவலாக பார்வையாளர்களின் கவனத்தைப் பெற்று ஹிட் அடிக்கிறது. அந்த ஹிட் அடித்த வீடியோ வரிசையில் ஒன்றாக இணைந்துள்ளது அந்த வீடியோ.

அந்த வீடியோவில் ஸ்கூட்டரை ஓட்டிச் செல்லும் அந்த நபரின் பெயர் முகமது ஆரிப் என அவனிஷ் தனது பதிவில் தெரிவித்துள்ளார். ஆரிப், உத்தரப் பிரதேச மாநிலம் அமேதி பகுதியைச் சேர்ந்தவர். சுமார் ஒரு வருடத்திற்கு முன்னர் தனது தோட்டத்தில் பறவை ஒன்று அடிபட்ட நிலையில் இருந்ததை அவர் பார்த்துள்ளார். அதனை காத்த அவர், உடல் நலன் தேர்ச்சி பெறவும் உதவியுள்ளார். அதன் காயம் சரியானதும் பறந்து செல்லும் என அவர் எண்ணியுள்ளார். ஆனால், அதற்கு மாறாக அவர் எங்கு சென்றாலும் அவரை பின் தொடர்ந்து வருகிறதாம் அந்த பறவை. அந்த வீடியோவைதான் அவனிஷ் பகிர்ந்துள்ளார்.

அந்த பறவை சாரசு கொக்கு வகையை சார்ந்த பறவை என சொல்லப்படுகிறது. இதைப் பார்த்த பார்வையாளர்கள் பலரும் தங்களது கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x