Cow Hug Day | பிப்.14-ல் பசுக்களை கட்டிப் பிடிக்க விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள்?

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

சண்டிகர்: எதிர்வரும் பிப்ரவரி 14 காதலர் தினத்தை முன்னிட்டு பசு மாடுகளை கட்டிப் பிடிக்குமாறு இந்திய விலங்குகள் நல வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அன்றைய தினம் உலகம் முழுவதும் ஒருவருக்கு ஒருவர் தங்களது அன்பை பகிர்ந்து கொண்டாடும் சூழலில் இதைச் செய்யுமாறு அந்த வாரியம் அறிவிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளதாக தெரிகிறது. இதனை Cow Hug Day என வாரியம் சொல்லியுள்ளது.

கடந்த 6-ம் தேதி வெளியான அறிவிப்பில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத் துறை அமைச்சகத்தின் கீழ் உள்ள விலங்குகள் நல வாரியம், பசுவின் மகத்தான நலனை கருத்தில் கொண்டு இதை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், ஒவ்வொரு பசு நேசர்களும் இதை செய்ய வேண்டும் என வாரியம் சொல்லியுள்ளது. பசு இந்திய கலாச்சாரம் மற்றும் கிராமப்புற பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. பல்லுயிர் பெருக்கத்தை பிரதிபலிப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. இது பாசிட்டிவ் எனர்ஜியை கொண்டு வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதோடு கூட்டு மகிழ்ச்சிக்கும் வழி சேர்க்குமாம்.

அதிகாரியின் ஒப்புதலுக்குப் பிறகு கால்நடை பராமரிப்பு துறையின் வழிகாட்டுதலின் பேரில் வெளியிடப்படுகிறது எனவும் இதில் சொல்லப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in