எளிதில் புரியும் தெளிவான எழுத்து! - கவனம் ஈர்த்த மருத்துவரின் மருந்துச் சீட்டு

எளிதில் புரியும் தெளிவான எழுத்து! - கவனம் ஈர்த்த மருத்துவரின் மருந்துச் சீட்டு
Updated on
1 min read

மருத்துவர் ஒருவர் இணைய உலகை தனது அழகான கையெழுத்தால் அதிர செய்துள்ளார். வழக்கமாக மருத்துவர்கள், மருந்துs சீட்டில் பரிந்துரைக்கும் மருந்துகளை மருந்தகத்தில் இருப்பவர்கள் மட்டுமே புரிந்துகொள்ளும் வகையில் இருக்கும். ஆனால், இந்த மருத்துவரின் கையெழுத்து ‘முத்து முத்தாக’ அதில் இடம்பெற்றுள்ளது. இது மாதிரியான மருத்துவர்களின் அழகான கையெழுத்து நெட்டிசன்கள் மத்தியிலும் கவனம் பெற்றுள்ளது.

இந்த பதிவை கடந்த 1-ம் தேதி சௌரபா ராஜண்ணா எனும் மருத்துவர் பகிர்ந்துள்ளார். ‘மருத்துவர்களின் கையெழுத்து மோசமாக இருக்கும் என எண்ணுபவர்களுக்கு. இது எனது கையெழுத்து அல்ல. அதுவும் தெளிவாகத்தான் இருக்கும். புறநோயாளிகள் சிகிச்சை பிரிவுக்கு சென்றபோது இதை பார்த்தேன்’ என ட்வீட் செய்துள்ளார். அதோடு அந்த மருந்து சீட்டையும் போட்டோ எடுத்து அதில் பகிர்ந்துள்ளார்.

இதேபோல கடந்த ஆண்டு கேரள மருத்துவர் ஒருவர் எழுதியிருந்த மருந்து சீட்டும் வைரலாகி உள்ளது. இந்தியாவில் மருத்துவர்களுக்கு என தனி மதிப்பு உண்டு. அதன் காரணமாகவே அந்த உன்னத பணிக்கு தங்கள் பிள்ளைகளை தயார் செய்வார்கள். சிலர் தானாகவே அதில் ஆர்வம் கொள்வார்கள்.

இருந்தாலும் அவர்கள் மருந்துகளை பரிந்துரைக்கும் அந்த மருந்துச் சீட்டில் ‘கிறுக்கி கிறுக்கி’ எழுதுவார்கள். பல நேரங்களில் அது விவாத பொருளாகியும் உள்ளது. சமயங்களில் அதை வைத்து மீம் போட்டு கலாய்ப்பதும் உண்டு.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in