ராஜபாளையத்தில் அடுப்பில்லா சமையல் முறையில் 100 விதமான உணவுகளை 5 நிமிடத்தில் சமைத்து சாதனை

ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழா.
ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தில் நடைபெற்ற பாரம்பரிய உணவுத் திருவிழா.
Updated on
1 min read

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் அடுப்பில்லா சமையல் முறையில் 100 பேர் நூறு விதமான உணவுகளை 5 நிமிடங்கள் 13 வினாடிகளில் சமைத்து உலக சாதனை படைத்தனர்.

ராஜபாளையம் தொழில் வர்த்தக சங்கத்தில் ஆரோக்கி யமான இயற்கை உணவுகள் மற்றும் பாரம்பரிய உணவுப் பழக்க வழக்கங்களை இளைய தலைமுறைக்குக் கொண்டு செல்லும் வகையில் உணவுத் திருவிழா நேற்று நடைபெற்றது. இதில் தேனி, விருதுநகர், மதுரை உட்படப் பல்வேறு மாவட் டங்களைச் சேர்ந்த 100 சமையல் கலைஞர்கள் கலந்து கொண்டனர்.

இவர்கள் நோபல் உலக சாதனை நடுவர்கள் மத்தியில் அடுப்பில்லா முறையில் உணவு சமைத்து சாதனை முயற்சியில் ஈடுபட்டனர். 5 நிமிடங்கள் 13 வினாடிகளில் 100 பேர் தனித்தனியாக 100 விதமான இயற்கை உணவுகளை சமைத்து அசத்தினர்.

நிகழ்ச்சியில் நோபல் உலக சாதனை நடுவர்கள் டாக்டர் அரவிந்த், ஹேமந்குமார், வினோத் குமார், பரணிதரன் ஆகியோர் கலந்து கொண்டு நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற சான்றிதழ்களை வழங்கினர். இதற்கான ஏற்பாடுகளை சமூக ஆர்வலர் சரண்யா செய்திருந்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in