சிவகங்கையில் மனநலம் பாதித்து சுற்றி திரிந்த பெண்ணை குணமாக்கிய அரசு மருத்துவர்கள்

சிவகங்கையில் மனநலம் பாதித்து சுற்றி திரிந்த பெண்ணை குணமாக்கிய அரசு மருத்துவர்கள்

Published on

சிவகங்கை: மனநலம் பாதித்து சிவகங்கையில் சுற்றித் திரிந்த திண்டுக்கல் பெண்ணை குணமடையச் செய்து, அரசு மருத்துவமனை நிர்வாகத்தினர் அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.

சிவகங்கை பேருந்து நிலையப் பகுதியில் 42 வயதான மனநலம் பாதித்த பெண் சுற்றித் திரிந்தார். அவரை, கடந்த ஆண்டு ஜூலை 26-ம் தேதி போலீஸார் மீட்டு, சிவகங்கை பழைய மருத்துவமனையில் உள்ள மனநலம் பாதிக்கப்பட்டோருக்கான ஆதரவற்றோர் மறுவாழ்வு மையத்தில் ஒப்படைத்தனர்.

அங்கு அவருக்கு அரசு மருத்துவர்கள் சிகிச்சை அளித்த நிலையில் குணமடைந்தார். அவரிடம் விசாரித்ததில் திண்டுக்கல் மாவட்டம், பனைமரத்துபட்டியைச் சேர்ந்த கிருஷ்ணன் மனைவி லட்சுமி (42) என்பது தெரியவந்தது. அவருக்கு மகன், மகள் உள்ளனர். இதையடுத்து அவரை நேற்று உறவினர்களிடம் சிவகங்கை மருத்துவக் கல்லூரி டீன் ரேவதிபாலன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் ஒப்படைத்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in