

21 ஆண்டுகளில் 14 பிள்ளைகளை பெற்ற தாய் ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் உலாவும் நெட்டிசன்களின் கவனத்தை பெற்றுள்ளது. அந்த வீடியோவில் அந்தத் தாய் தனது பிள்ளைகள் ஒவ்வொருவரையும் அறிமுகம் செய்து வைக்கிறார்.
இணைய வெளியில் தினந்தோறும் லட்ச கணக்கான வீடியோக்கள் ஸ்ட்ரீம் ஆகின்றன. அதில் சில மட்டுமே பரவலாக பார்வையாளர்களின் கவனத்தை பெற்று ஹிட் அடிக்கிறது. அந்த ஹிட் அடித்த வீடியோ வரிசையில் அமைந்துள்ளது. இது எப்போது பதிவு செய்தது என தெரியவில்லை. இருந்தாலும் இப்போது இதனை யாஷர் அலி என்பவர் பகிர்ந்துள்ளார்.
மொத்தம் 43 நொடிகள் ரன் டைம் கொண்ட இந்த வீடியோவில் பெண் ஒருவர் தான் பெற்றெடுத்த 14 குழந்தைகளையும் அறிமுகம் செய்து வைக்கிறார். அதில் அவர் கருவுற்றிருந்த ஆண்டு மற்றும் வயதையும் குறிப்பிட்டுள்ளார். 1996 முதல் 2017 வரையில் அவர் குழந்தைகளை பெற்றுக் கொண்டுள்ளார். அவரது 20-வது வயதில் துவங்கி 42-வது வயது வரையில். இதில் கடந்த 2014-ல் அவருக்கு கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது. அதற்கு ஒரு தேவதையின் எமோஜியை அவர் வீடியோவில் வைத்துள்ளார்.
சுமார் 7.77 லட்சம் பார்வையாளர்களை இந்த வீடியோ பெற்றுள்ளது. அதோடு இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை கலவையாக தெரிவித்து வருகின்றனர்.