

“இளமை திரும்ப வராது...” - இதுதான் காலம்தோறும் உலக முழுவதும் கூறப்பட்டு வரும் வாதம். ஆனால், வருங்காலங்களில் இது பொய்யாவதற்கான சாத்தியக்கூறுகள் அடுத்தடுத்து நிகழ்ந்து வருகின்றன.
மனிதர்களுக்கு வயதாவதைத் தடுப்பதற்கான ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாகவே நடந்து வருகிறது. இந்த நிலையில், முதுமை தொடர்பான ஆராய்ச்சியில் முன்னேற்றம் கண்டுள்ளதாக தனியார் அறிவியல் மாத இதழிலில் (cell) விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். அந்த இதழில் குறிப்பிட்டுள்ளதன் முக்கிய அம்சங்கள்: “எலிகள் மீதான சமீபத்திய சோதனைகள் மூலம் முதுமை என்பது உண்மையில் ஒரு மீளக்கூடிய செயல்முறை என்றும், அது சரியான நேரத்தில் முன்னோக்கி மற்றும் பின்னோக்கி நகரும் என்பதைக் காட்டுகிறது.
இந்த ஆய்வின் மூத்த விஞ்ஞானி டேவிட் சின்க்ளேரின் கூற்றுப்படி, ”மனித உடல்கள் நமது இளமைக்கால செல்களின் பிரதியைக் கொண்டுள்ளன. இந்த நகல்களை தூண்டி மீள் உருவாக்கம் செய்வதன் மூலம் இளமையானத் தோற்றத்தை பெற முடியும்” என்று குறிப்பிடுகிறார்.
இவ்வாறு இந்த சோதனையின் முடிவுகள், பல காலமாக நாம் நம்புவதுபோல், முதுமை என்பது நமது டிஎன்ஏ மரபணு மாற்றங்களுக்கு உட்படுவதாலும் அல்லது நமது உடலின் சேதமடைந்த செல்கள் காலம் செல்ல செல்ல உடலில் பாதிப்புகளை ஏற்படுத்துவதாலும் ஏற்படுவது அல்ல என்ற சவாலை நம் முன் வைக்கின்றன.
முதுமை என்பது செல்கள் தமது நினைவுகளை மறப்பதினால் ஏற்படுகிறது என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். மேலும், விஞ்ஞானிகள் நடத்திய சோதனையில் எலிகளில் நடத்தப்பட்ட எங்கள் ஆய்வில் முதுமை கட்டுப்படுத்தப்படுவதைக் கண்டோம். மேலும், கண்பார்வை இழந்த எலிகளின் சேதமடைந்த கண்களில் மனிதனின் இளம் வயது தோல் செல்களை செலுத்தியதன் மூலம் பல எலிகள் பார்வையை மீண்டும் பெற முடிந்தது.
இந்த ஆய்வின் மூலம் மூளை, தசை மற்றும் சிறுநீரக செல்களை மீண்டும் இளமையான நிலைக்கு மீட்டெடுக்க முடிந்தது. தற்போது, செல்களில் மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் முதுமையை ஒன்றுக்கு மேற்பட்ட முறையில் மீட்டெடுக்க முடியுமா என்ற ஆராய்ச்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக இறங்கி உள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.