புற்றுநோய் பாதிப்புகளுக்கு முக்கியக் காரணியாகும் மதுப் பழக்கம்: உலக சுகாதார நிறுவன ஆய்வில் எச்சரிக்கை

டாஸ்மாக் | கோப்புப் படம்
டாஸ்மாக் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: முதல் துளி மது அருந்தத் தொடங்கும்போதே ஆபத்து தொடங்கும் என்றும், மது அருந்தினால் புற்றுநோய் ஆபத்து என்றும் என்று உலக சுகாதார நிறுவனத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியா மட்டுமல்ல, உலக அளவில் மனிதர்கள் அதிக அளவு மது அருந்துகின்றனர். இதன் காரணமாக பல்வேறு வகையான நோய்கள் ஏற்படுகிறது. 230 வகையான நோய்களுக்கு மது அருந்துவது காரணமாக உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. உலக அளவில் மது காரணமாக, ஆண்டுக்கு 30 லட்சம் மரணங்கள் பதிவாகின்றன. இதில் 13.5 சதவீத மரணங்கள் 20 முதல் 39 வயது வரை உள்ள இளைஞர்கள் ஆவர்.

மேலும், புற்றுநோய் பாதிப்புக்கு மது முக்கியக் காரணியாக உள்ளது. உலக அளவில் ஒவ்வொரு ஆண்டும் 7,40,000 புற்றுநோய் பாதிப்புகளுக்கு மருந்து அருந்துவது முக்கிய காரணமாக உள்ளது. உலக அளவில் ஐரோப்பிய பிராந்தியத்தில் மது அருந்துபவர்களின் எண்ணிக்கை அதிக அளவு உள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தில் மது பழக்கத்தால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து ஆய்வு ஒன்றை உலக சுகாதார நிறுவனம் நடத்தியுள்ளது. இந்த ஆய்வு லான்செட் மருத்துவ இதழில் வெளியாக உள்ளது. மது அருந்துபவர்களில் 1.5 லிட்டருக்கும் குறைவான ஒயின் அல்லது 3.5 லிட்டருக்குக் குறைவான பீர் அருந்துபவர்கள் மற்றும் மற்ற மது வகைகளை உட்கொள்பவர்களிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளின் முக்கிய அம்சங்கள்:

  • மது அருந்துவதைப் பொறுத்தவரையில், ஆரோக்கியத்தை பாதிக்காத பாதுகாப்பான அளவு என்பது எதுவும் இல்லை.
  • சிறிய அளவு மது கூட உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
  • குடல் புற்றுநோய், மார்பக புற்றுநோய் பாதிப்புக்கு மது முக்கியக் காரணியாக உள்ளது.
  • பொதுவான ஏழு வகையான புற்றுநோய் பாதிப்புகள் ஏற்பட மது அருந்துவது முக்கியக் காரணியாக உள்ளது.
  • இதய நோய்கள் மற்றும் வகை 2 நீரிழிவு நோய்களுக்கு மது முக்கியக் காரணியாக அமையலாம்.
  • ஒரு துளி மது கூட உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடும்.
  • மது அருந்துதலில், பாதுகாப்பான அளவு மது அருந்துதல் என்பதை வரையறுக்க முடியாது.
  • லேசான, மிதமான மது அருந்துபவர்கள் கூட எச்சரிக்கையுடன் உடல் நலத்தை பாதுகாக்க வேண்டும்.
  • மது புற்றுநோயை உண்டாக்கும் என்பது நன்கு நிறுவப்பட்டுள்ளது.
  • புகையிலைப் பொருட்கள் போல மதுபானங்களின் லேபிள்களில் புற்றுநோய் தொடர்பான சுகாதாரத் தகவல்கள் இடம்பெறுவது அவசியம்.
Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in