

புனே: கமல்ஹாசனின் ‘வசூல்ராஜா எம்பிபிஎஸ்’ படத்தில் நடிகர் காகா இராதாகிருஷ்ணன் கேரம் போர்டு விளையாட்டில் அசத்தலான ஆட்டத்தையும், ஆர்வத்தையும் வெளிப்படுத்துவது போன்ற காட்சிகள் இருக்கும். அதுபோல புனேவை சேர்ந்த 83 வயதான பாட்டி ஒருவர் கேரம் போர்டு விளையாட்டில் கெத்து காட்டி வருகிறார். அவரது அபார ஸ்ட்ரைக்கிங் ஷாட்களை வீடியோவாக பார்த்த நெட்டிசன்கள் ஆச்சரியத்தில் அசத்து போயுள்ளனர்.
இதனை அவரது பேரன் சமூக வலைதளத்தில் பெருமிதத்துடன் பகிர்ந்துள்ளார். 90-களில் வளர்ந்த குழந்தைகளின் ஃபேவரைட் விளையாட்டுகளில் கேரம் விளையாட்டும் நிச்சயம் இருக்கும்.
புனேவில் மகர்பட்டா நகர கேரம் போட்டி தொடரில் ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவில் அவர் முறையே வெண்கலம் மற்றும் தங்கம் வென்றுள்ளார். இந்த தொடருக்கான பயிற்சி நிமித்தமாக இளம் வயது கேரம் விளையாட்டு ஆர்வலர்களுடன் இணைந்து அவர் விளையாடி உள்ளார். அந்தக் காட்சிகளும் ட்விட்டரில் பகிரப்பட்டுள்ளது.
83 வயதிலும் கேரம் விளையாட்டில் ஸ்டெடியாகவும், நேர்த்தியாகவும் அவர் காயின்களை ஸ்ட்ரைக் செய்கிறார் என நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். பலரும் அவரது ஆர்வத்திற்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.