Published : 04 Jan 2023 03:14 PM
Last Updated : 04 Jan 2023 03:14 PM

அந்த மனசுதான் சார் கடவுள் | 30 அடி உயர விளம்பர பதாகையில் சிக்கிய பறவை: உயிர் காத்த பெங்களூரு காவலர்

பறவையை காக்கும் காவலர் | படம்: ட்விட்டர் வீடியோ

பெங்களூரு: பிசியான பெங்களூரு நகரில் 30 அடி உயர விளம்பர பதாகை ஒன்றில் சிக்கி தவித்து வந்த பறவையை காத்துள்ளார் உன்னதமான மனசு கொண்ட காவலர் ஒருவர். சிறகடித்தும் பறக்க முடியாமல் தவித்த அந்த பறவையை காவலர் விடுவிக்கும் வீடியோ நெட்டிசன்களின் நெஞ்சங்களை கவர்ந்துள்ளது. அவரது செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.

இன்றைய இணைய உலகில் வாட்ஸ்அப், பேஸ்புக், இன்ஸ்டா, ட்விட்டர், யூடியூப் என பல்வேறு சமூக வலைதளங்களில் எண்ணில் அடங்கா வீடியோக்கள் வலம் வருகின்றன. அதில் சில மட்டுமே நெட்டிசன்களின் பார்வையை பரவலாக பெறுகின்றன. அதில் இந்த வீடியோவும் ஒன்று.

இந்த செயலை செய்தவர் பெங்களூரு நகரின் ராஜாஜிநகர் போக்குவரத்து காவல் நிலைய காவலரான சுரேஷ் என தெரியவந்துள்ளது. இந்த வீடியோவை ஐபிஎஸ் அதிகாரி குல்தீப் குமார் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். “யாரும் பார்த்திடாத, அறிந்திடாத காவலரின் முகம்” என இதற்கு அவர் கேப்ஷனும் கொடுத்து பாராட்டியுள்ளார்.

இந்த வீடியோ சமூக வலைதளத்தில் செம வைரலாகி உள்ளது. இதை பார்த்த நெட்டிசன்கள் தங்களது பாராட்டுகளை அந்த காவலருக்கு கமெண்ட் மூலம் தெரிவித்து வருகின்றனர். கர்நாடக மாநில உள்துறை அமைச்சர் அரக ஞானேந்திராவும் காவலர் சுரேஷின் செயலை பாராட்டியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x