அம்மா, அப்பாவுக்கு பணம் கொண்டுவரவும்: 8 வயது சிறுமி கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு எழுதிய உருக்கமான கடிதம்

எம்மி எழுதியுள்ள கடிதம்
எம்மி எழுதியுள்ள கடிதம்
Updated on
1 min read

லண்டன்: கிறிஸ்துமஸ் தாத்தாவுக்கு சிறுவர்கள் கடிதம் எழுதுவது கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தின் பாரம்பரிய வழக்கமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் பிரிட்டனில் வசிக்கும் எம்மி என்ற 8 வயது சிறுமி எழுதியுள்ள கடிதம் சமூக வலைதளத்தில் கவனம் பெற்றுள்ளது.

கடந்த சில ஆண்டுகளாகவே சிறுவர்கள் எழுதும் கடிதம் அவர்களுக்கு பிடித்த பொம்மைகள் தொடங்கி பலவற்றையும் கேட்கும் வகையில் அமைந்துள்ளது. அதில் சில தன்னலமில்லாத வகையிலும் உள்ளது. அந்த வகையில் எம்மி எழுதியுள்ள கடிதமும் உள்ளது.

“இந்த கிறிஸ்துமஸுக்கு எனக்கு என்ன வேண்டுமென்றால் அம்மா, அப்பாவுக்கு நீங்கள் கொஞ்சம் பணம் கொண்டு வரவும். அவர்கள் நிதி சிக்கல் காரணமாக பணம் செலுத்த முடியாமல் சிரமத்தில் உள்ளனர். அதனால் நானும் வருத்ததில் உள்ளேன். உங்களால் இதை செய்ய முடியுமா? நான் கேட்பது அதிகம்தான் என்பது எனக்கு தெரியும். அதற்காக நான் வருந்துகிறேன். அன்புடன் எம்மி” என கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த கடிதத்தை எம்மியின் உறவினர் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த கடிதம் தன்னை உருக செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in