உன் மூச்சில் நான் வாழ்ந்தால் என் முதுமை ஆனந்தம் | மெட்ரோ ரயிலில் செல்ஃபி எடுத்து மகிழ்ந்த மூத்த தம்பதியர்: வைரல் வீடியோ

வீடியோ ஸ்க்ரீன்ஷாட்
வீடியோ ஸ்க்ரீன்ஷாட்
Updated on
1 min read

‘சின்னச் சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு’ என கவிஞர் வைரமுத்து இந்தியன் பட பாடலில் சொல்லி இருப்பார். அந்த வரிகளுக்கு உகந்தபடி மெட்ரோ ரயிலுக்குள் செல்ஃபி எடுத்து தங்கள் அன்பை பகிர்ந்து மகிழ்ந்துள்ளனர் மூத்த தம்பதியர். அதுவும் பலமுறை செல்ஃபி எடுக்க முயன்று இறுதியில் தங்கள் நிறுத்தம் வருவதற்குள் அழகான படம் ஒன்றை அவர்கள் க்ளிக் செய்துள்ளனர்.

இந்த க்யூட் காட்சியை வீடியோவாக பதிவு செய்து, சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் போட்டோகிராபி ஆர்வலர் ஒருவர். இந்த வீடியோ கொல்கத்தாவில் எடுக்கப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. சுமார் 40 நொடிகள் டைம் டியூரேஷன் கொண்ட இந்த வீடியோவை இதுவரையில் 6.58 லட்சம் பார்த்துள்ளனர். லைக்குகளும், கமெண்டுகளும் கூட குவிந்து வண்ணம் உள்ளது.

அந்த 40 நொடிகள் முழுவதும் ஒரு நல்ல செல்ஃபி எடுக்க தம்பதியர் இருவரும் வெவ்வேறு ஆங்கிளில் முயன்று பார்த்து இறுதியில் வெற்றிகரமாக அதை எடுத்து முடிக்கின்றனர். “சரியான நபருடனான வாழ்க்கை பயணம் கொஞ்சம் சிறப்பாகவே இருக்கும் இல்லையா?” என அந்த வீடியோவுக்கு கேப்ஷன் கொடுக்கப்பட்டுள்ளது.

பயனர் ஒருவர் அந்த வீடியோ செல்ஃபி எடுக்க முயன்ற இருவரும் தனது நண்பர்கள் என சொல்லி கமெண்ட் செய்துள்ளார். அதோடு இந்த வீடியோவை எடுத்தமைக்கு நன்றியும் சொல்லியுள்ளார்.

பிள்ளைகளை புன்னகை பூக்க செய்வதே பெற்றோர்களின் பணி. அதனால் இதெல்லாம் தங்கள் பிள்ளைகள் அல்லது பேர பிள்ளைகளுக்காக அவர்கள் எடுத்திருக்காலம். இது அவர்களது சந்ததியினருக்காக அவர்கள் எடுத்த முயற்சி என ஒருவர் தெரிவித்துள்ளார். சிலரோ அவர்கள் பிரைவசி குறித்து பேசியுள்ளனர். சிலரோ இந்த வீடியோ வாழ்வின் அழகிய தருணங்களில் ஒன்று என சொல்லியுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in