

தஞ்சாவூர்: பட்டுக்கோட்டை அருகே திருச்சிற்றம்பலத்தில் நேற்று நடைபெற்ற ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகத்துக்கு, மத நல்லிணக்கத்தின் அடையாளமாக முஸ்லிம்கள் யாகசாலைக்கான பூஜை பொருட்களை சீர்வரிசையாக எடுத்து வந்து வழங்கினர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலத்தில் ரூ.70 லட்சம் மதிப்பில் புதிதாக எழுப்பப்பட்ட ஐயப்பன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடைபெற்றது.
முன்னதாக, நடைபெற்ற 4-ம் கால யாகசாலை பூஜைக்காக பழங்கள், யாகசாலை பொருட்களை அப்பகுதியைச் சேர்ந்த முஸ்லிமகள் சீர்வரிசையாக எடுத்து ஊர்வலமாக மங்கல வாத்தியங்கள் முழங்க கோயிலுக்கு கொண்டு வந்தனர். அவர்களை, கும்பாபிஷேக விழாக் குழுவினர் சந்தனம் கொடுத்து வரவேற்றனர்.