உலகின் நீளமான மூக்கை உடைய நபர்: நூற்றாண்டு கடந்தும் முறியடிக்கப்படாத சாதனை

தாமஸ் வெடர்ஸின் மெழுகுச் சிலை
தாமஸ் வெடர்ஸின் மெழுகுச் சிலை
Updated on
1 min read

உலகின் நீளமான மூக்கு கொண்ட நபரின் சாதனை, நூற்றாண்டு கடந்தும் இதுவரை முறியடிக்கப்படாமலே உள்ளது. நீளமான முடி, நகம், உயரம் என பல கின்னஸ் சாதனைகளை நாம் கேள்விப்பட்டிருப்போம். அந்த வகையில் உலகின் நீளமான மூக்கு கொண்ட நபரை உங்களுக்குத் தெரியுமா?

இங்கிலாந்தைச் சேர்ந்தவர் தாமஸ் வெடர்ஸ். இவர் 18-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்தவர். உலகின் மிக நீளமான மூக்கைக் கொண்டவராக அறியப்படும் இவர் சர்க்கஸ்களில் கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கு கொண்டு புகழ் பெற்றார். அக்காலத்தில் கேமராக்கள் இல்லாத காரணத்தினால் தாமஸ் வெடர்ஸின் புகைப்படங்கள் எடுக்கப்படவில்லை.

அவரின் மூக்கினை ஓவியங்கள் மூலமும், மெழுகுச் சிலைகள் மூலமும் நம்மால் பார்க்க முடிகிறது. தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக தற்போது புகைப்படங்களாகவும் அவரது உருவம் வெளிவந்து கொண்டிருக்கிறது.

தாமஸ் வெடர்ஸ் மூக்கின் நீளம் 7.5 அங்குலமாகும். அதாவது 19 செ.மீ. எளிமையாகக் கூறினால் தற்போது ஐபோன்-14 அளவை ஒத்தது தாமஸ் வெடர்ஸ் மூக்கின் நீளம்.

தாமஸ் வெடர்ஸ் மூக்கினை அடையாளமாக வைத்துதான் பல கார்ட்டூன் கதாபாத்திரங்களுக்கு மூக்கு நீளமாக வைக்கப்படுவதை தற்போது நாம் புரிந்து கொள்ளலாம். உலகின் நீளமான மூக்கை உடைய நபர், சர்க்கஸில் பணி செய்தார் என்ற தகவலைத் தவிர, தாமஸ் வெடர்ஸை பற்றி தனிப்பட்ட தகவல்கள் எதுவும் இதுவரை கிடைக்கவில்லை.

தனது 50 வயதில் மரணம் அடைந்த தாமஸ் வெடர்ஸ் இன்னமும் உலகின் நீளமான மூக்கினை உடையவராக அறியப்படுகிறார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in