Published : 14 Nov 2022 10:26 PM
Last Updated : 14 Nov 2022 10:26 PM

124 பில்லியன் டாலர்களை தானமாக கொடுக்க ஜெஃப் பெசோஸ் திட்டம்

ஜெஃப் பெசோஸ் | கோப்புப்படம்

சியாட்டல்: தனது சொத்து மதிப்பில் சுமார் 124 பில்லியன் அமெரிக்க டாலர்களை கொடுக்க உள்ளதாக நேர்காணல் மூலம் அமேசான் நிறுவனர் ஜெஃப் பெசோஸ் தெரிவித்துள்ளார். காலநிலை மாற்றத்திற்கு எதிராக உலகம் செயல்பட இந்த நிதி பயன்படுத்தப்படும் என அவர் தெரிவித்துள்ளதாக தகவல்.

தனது வாழ்நாளில் தான் ஈட்டிய மொத்த செல்வத்தையும் மனிதத்தை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டு வரும் மக்களுக்கு ஆதரவாக வழங்க அவர் விரும்புவதாகவும் தகவல்.

58 வயதான பெசோஸ் உலக பணக்காரர்களில் நான்காவது இடத்தில் உள்ளார். உலகின் நம்பர் ஒன் பணக்காரர் என்ற அந்தஸ்தில் அவர் சில காலம் இருந்துள்ளார். இந்த சூழலில் முதல் முறையாக தனது சொத்தில் ஒரு பகுதியில் தானமாக கொடுக்க முன்வந்துள்ளார். இதற்கு முன்னர் இது போன்ற செயல்களில் அவர் ஈடுபடாத காரணத்தால் விமர்சனத்திற்கும் ஆளாகி உள்ளார்.

இதனை தனது துணைவியார் உடன் இருக்க நேர்காணலில் சொல்லி உள்ளார். இருந்தாலும் இது எப்போது நடக்கும் என்பதை அவர் சொல்லவில்லை. தங்களது மொத்த சொத்து மதிப்பில் பெரும் பகுதியை தானமாக கொடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உங்களது சொத்து மதிப்பில் பெரும் பகுதியை தொண்டு பணிக்காக கொடுப்பீர்களா? என கேட்கப்பட்டது. ‘நிச்சயம் கொடுப்பேன்’ என அவர் சொல்லியுள்ளார். பெசோஸ் எர்த் ஃபண்ட் மூலம் ஆண்டுக்கு 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வழங்கப்படுவதாக தகவல்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x